மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வங்கக்கடலில் புயல்: எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது



Oct 25, 2016

வங்கக்கடலில் விசாகப்பட்டினம் அருகே புயல் உருவாகியுள்ளது. அதற்கு கியான்ட் என பெயரிட்டுள்ளனர். குறைந்த காற்றழுத்ததாழ்வு மண்டலம் புயலாக மாறி வடமேற்கு மற்றும் வடக்கு திசை நகர்வதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

siragu-puyal

அதனால் பாம்பன், நாகை, கடலூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர். இந்த கியான்ட் புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்தப் புயல் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மியான்மர், ஒடிசா, வடக்கு ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்தப் புயல் பூரி – காகிநாடா இடையே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாகவும், கடக்காமல் இருப்பதற்கும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வங்கக்கடலில் புயல்: எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது”

அதிகம் படித்தது