மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வங்கிகளில் நடந்த மோசடிகள் பட்டியலை வெளியிட்டது ரிசர்வ் வங்கி



Mar 14, 2017

2016ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை வங்கிகளில் நடைபெற்ற மோசடிகள் குறித்து ஆய்வு நடத்தி அதற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி. 2016 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் பொது மற்றும் தனியார் துறை வங்கிகளில் 17750 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது.

Police officer stands guard in front of the RBI head office in Mumbai

இம்மோசடி தொடர்பாக 3870 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் வங்கி ஊழியர்கள் 450 பேரும் அடங்கியுள்ளனர்.

இப்பட்டியலின்படி தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி முதலிடம் பெற்றுள்ளது. இந்த வங்கியில் 455 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளது. இதில் 429 வழக்குகள் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் எச்.டி.எப்.சி பாங்க், ஆக்சிஸ் பாங்க், பாங்க் ஆப் பரோடா, சிட்டி பாங்க் உள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வங்கிகளில் நடந்த மோசடிகள் பட்டியலை வெளியிட்டது ரிசர்வ் வங்கி”

அதிகம் படித்தது