மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்-களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது



Mar 13, 2017

சென்ற ஆண்டு நவம்பர் 8ம் தேதி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெற்றது மத்திய அரசு. இதையடுத்து மக்களிடையே பெரும் பணத்தட்டுப்பாடு நிலவியது.

Siragu cash withdrawal1

இப்பணத்தட்டுப்பாட்டை குறைப்பதற்கு வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்-களில் பணம் எடுப்பதற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. புதியதாக 500 மற்றும் 2000ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டது. பின் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்-களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வந்தது.

பிப்ரவரி 20ம் தேதியிலிருந்து பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு ரூ.24000-லிருந்து ரூ.50,000ஆக உயர்த்தியது. மேலும், மார்ச் 13ம் தேதியிலிருந்து வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்-களில் பணம் எடுப்பதற்கான முற்றிலும் நீக்கப்படும் என்று ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று(13.03.17) முதல்வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்-களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது. மேலும் பணத்தட்டுப்பாடு முற்றிலும் சரியாவதற்கு சில நாட்கள் ஆகும் என்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்-களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது”

அதிகம் படித்தது