மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வடகிழக்கு பருவமழை: தென் தமிழகத்தில் கனமழை, சென்னையில் மிதமான மழை



Oct 31, 2016

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் உட்புற மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

siragu-vaanilai

நேற்று முதல் பருவமழை காரணமாக கோவை, திருப்பூர், காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. வட கடலோர தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யலாம் எனவும், சென்னையில் மிதமான மழைக்கே வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை நேற்று மிதமான மழை பெய்த பின் இன்று வெயில் அடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வடகிழக்கு பருவமழை: தென் தமிழகத்தில் கனமழை, சென்னையில் மிதமான மழை”

அதிகம் படித்தது