மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வருமான வரித்துறை: பிறர் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை



Nov 21, 2016

கடந்த நவம்பர் 8ம் தேதி 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து அந்நோட்டுக்களை வரும் டிசம்பர் 30 வரை வங்கிகளில் டெபாசிட் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

A man deposits his money in a bank in Amritsar

இதன் காரணமாக கறுப்பு பணம் வைத்திருப்போர் தமது பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றுவதற்காக பிறரது வங்கிக்கணக்கில் செலுத்த முயற்சித்து வருகின்றனர்.

வருமான வரித்துறையும், அரசும் கவனித்து வந்ததில் சில மாதங்களுக்கு முன்பு துவக்கப்பட்ட ‘ஜன்தன்’ திட்ட வங்கிக் கணக்கில் லட்சக்கணக்கில் திடீரென டெபாசிட் செய்தது தெரியவந்துள்ளது. பின் நாடு முழுவதும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 200 கோடி ரூபாய் கறுப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையொட்டி பிறர் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தினால் அபராதத்துடன், 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கிடைக்கும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வருமான வரித்துறை: பிறர் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை”

அதிகம் படித்தது