மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வர்தா புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு சென்னை வருகை



Dec 28, 2016

கடந்த 12ம் தேதி வர்தா புயல் சென்னைக்கு மிக அருகே கரையைக் கடந்தது. இப்புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் மின் கம்பங்கள் மற்றும் லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்தன. இம்மூன்று மாவட்டங்களிலும் ஒரு வாரத்திற்கும் மேலாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.

siragu-vardha

இந்நிலையில் வர்தா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்து கணக்கெடுக்க பிரவீன் வசிஷ்டா தலைமையில் மத்தியகுழு இன்று சென்னை வந்தது. இக்குழு இன்று காலை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்துவிட்டு, பின்னர் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து வருகிறது.

முதலில் சென்னை- தியாகராயர் நகரில் ஆய்வு நடைபெற்றது. அடுத்து அண்ணாநகர் வளைவு அருகே மரங்கள், மின்கம்பங்கள் குவிக்கப்பட்ட கிடங்கை ஆய்வு செய்தது.

சென்னையில் ஆய்வு முடிந்த பின் காஞ்சிபுரமும், நாளை திருவள்ளூரிலும் ஆய்வு தொடரும். நாளை ஆய்வு முடியும் நிலையில் அன்றே டெல்லி சென்று தங்களது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வர்தா புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு சென்னை வருகை”

அதிகம் படித்தது