மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வானிலை ஆய்வு மையம்: உள் மாவட்டங்களில் இடியுடன் மழை



May 5, 2017

இந்த வருடம் கோடைகாலத்தின் தாக்கம் மார்ச் மாதத்திலிருந்தே ஆரம்பித்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்றிலிருந்து அக்னி நட்சத்திரம் ஆரம்பித்துள்ளதால் வெயில் வாட்டி வதைக்கிறது.

Siragu meteorological

கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து பல இடங்களில் 100டிகிரிக்கும் மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. எனினும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அவ்வப்போது இடியுடன் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் படி தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்திருக்கிறது வானிலை ஆய்வு மையம்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வானிலை ஆய்வு மையம்: உள் மாவட்டங்களில் இடியுடன் மழை”

அதிகம் படித்தது