மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வானிலை ஆய்வு மையம்: தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை



Apr 29, 2017

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்திலிருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. மேலும் கடந்த சில வாரங்களில் அதிகமான வெப்பநிலை தமிழகம் முழுவதும் நிகழ்கிறது.

Siragu meteorological

எனினும் கடந்த சில நாட்களாக வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ள நிலையில் மழை பெய்து வருவதால் வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்பு உள்ளது.

அவ்வகையில் இன்று தமிழகத்தின் உள் மாவட்டங்களான மதுரை, திருச்சி, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், தேனி போன்ற போன்ற 19 மாவட்டங்களில் சூறைக் காற்றுடன் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வானிலை ஆய்வு மையம்: தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை”

அதிகம் படித்தது