மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வானிலை ஆய்வு மையம்: தென் தமிழகத்தில் கனமழை



Nov 22, 2016

வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியை ஒட்டி இந்தியப் பெருங்கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை மையம் கொண்டுள்ளதால் தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

siragu-vaanilai

குமரி கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வடக்கு நோக்கி நகர்வதால், அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வட தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்படும், சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்ற 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டியில் 100 மி.மீ, வேதாரண்யத்தில் 55 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வானிலை ஆய்வு மையம்: தென் தமிழகத்தில் கனமழை”

அதிகம் படித்தது