மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

விசித்திர வழக்குகள் பகுதி 8

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

May 21, 2022

siragu vischithra valzhakku1

2015இல் Paulley v. FirstGroup PLC என்ற வழக்கு யுகேவில் நீதிமன்றத்திற்கு வந்தது. இந்த வழக்கின் முக்கியத்துவம் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளை உறுதி செய்வதாக இருந்தது. Doug Paulley – டௌக் பாலி யுகேவில் மாற்றுத்திறனாளிகளுக்காக வாதிட்டு அவர்களின் உரிமைகளுக்குக் குரல் கொடுக்கும் செயற்பாட்டாளர். அவரும் மாற்றுத் திறனாளி. பல வழக்குகளில் அவரே வாதிகளுக்காக வாதாடி வெற்றி பெற்றுள்ளார். 2012ஆம் ஆண்டு, ஒரு அரசுப் போக்குவரத்துக் கழகம் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை தருவது அவர்களின் நிறுவன சட்ட திட்டங்களில் இல்லை என்பது சரியல்ல என்ற வழக்குத் தொடுத்தார். அதற்குக் காரணம் அவர் பேருந்தில் ஏற முயன்றபோது மாற்றுத் திறனாளிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் ஏற்கனவே வேறொரு பெண் குழந்தையுடன் அமர்ந்திருந்தார். ஓட்டுநர் வற்புறுத்தியும் அவர் தான் முதலில் ஏறியதால் அந்த இடத்தை விட்டுத் தர இயலாது என்று மறுத்துவிட்டார். அதனால் பாலியால் அந்தப் பேருந்தில் ஏற முடியவில்லை. Disability Discrimination Act 1995 என்ற சட்டமிருந்தும் மாற்றுத் திறனாளி ஒருவருக்குப் பேருந்தில் இடம் கிடைக்கவில்லை என்பது வாதம். இந்தச் சட்டம் 2010ஆம் ஆண்டு, Equality Act எனப் பெயர் மாற்றப்பட்டது.

முதல் கட்டத் தீர்ப்பு கீழ் நீதிமன்றம் பாலிக்குச் சாதகமாக வழங்கியது. ஆனால் இந்த வழக்கைப் போக்குவரத்துக் கழகம் உச்சநீதிமன்றத்திற்கு மேல் முறையீட்டுக்கு எடுத்துச் சென்றது. பாலி சார்பில் 2010 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்காகக் கொண்டு வரப்பட்ட சட்டம் மீறப்பட்டிருப்பதாக வாதாடினர். இந்த வழக்கின் தீர்ப்பு மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகளை நிலைநாட்டியது. உச்ச நீதிமன்றம் போக்குவரத்துக் கழகங்கள் அல்லது நிறுவனங்கள் முதலில் வந்தவர்களுக்கான வாய்ப்பு என்பதைப் பின்பற்றாமல் மாற்றுத் திறனாளிகள் பிறகு பேருந்தில் ஏறினாலும் அவர்களுக்கான இடத்தை உறுதி செய்ய வேண்டும் என்றது. இந்த வழக்கை நடத்திய பாலிக்கு 2015ஆம் ஆண்டு, இந்த வழக்கை நடத்தி வெற்றிபெற்றதற்காக ‘சலியாத போராளி’ என்ற விருதும் வழங்கப்பட்டது.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “விசித்திர வழக்குகள் பகுதி 8”

அதிகம் படித்தது