மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

விசித்திர வழக்குகள் – பகுதி 11

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Jul 23, 2022

siragu vischithra valzhakku1

1967ஆம் ஆண்டு வரை அமெரிக்காவில் இனத்தைக் கடந்து திருமணம் செய்வது மிகப் பெரிய சவாலாகவும் தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்பட்டது. அதனை அமெரிக்க உச்ச நீதிமன்றம் loving v. Virginia என்ற வழக்கின் தீர்ப்பின் மூலம் மாற்றியது. 1958 இல் வெர்ஜினியா மாநிலத்தின் வசித்த மைல்ட்ரெட் என்ற கறுப்பின பெண் அதே மாநிலத்தைச் சேர்ந்த ரிச்சர்ட் லவிங் என்ற வெள்ளையினத்தவரை திருமணம் செய்தார்.

ஆனால் வெர்ஜினியாவின் சட்டம் இனம் கடந்து திருமணம் செய்வதை சட்டப்படி அங்கீகரிக்கவில்லை. அதனால் அவர்கள் டிஸ்டிரிக்ட் ஆஃப் கலோம்பியா சென்று திருமணம் செய்துகொண்டு திரும்பினர்.  ஒரே மாதத்தில் காவல்துறை அவர்களைக் கைது செய்தது. வெர்ஜினியா நீதிமன்றம் இருவருக்கும் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தது. சிறைத் தண்டனை ரத்து செய்ய விரும்பினால், அவர்கள் மாநிலத்தைவிட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் 25 ஆண்டுகள் இணையர்களாக வெர்ஜினியாவிற்குள் நுழையக் கூடாது என்றும் கூறியது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்தபோதும் வெர்ஜினியா உச்ச நீதிமன்றம் அதனை உறுதி செய்தது.

பிறகு வழக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. உச்சநீதிமன்றத்தில், வெர்ஜினியாவின் மாநிலச் சட்டம் அனைவரும் சமம் என்பதற்கு எதிரானது என்று எடுத்துவைக்கப்பட்டது அதற்கு வெர்ஜினியா சார்பில் தண்டனையில் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லாதபோது எப்படி தங்கள் மாநில சட்டம் சமத்துவத்திற்கு எதிரானது எனக் கேள்வியெழுப்பியது.  அதற்கு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் ஈர்ல் வாரேன், “ஒருவர் இனம் கடந்து யாரைத் திருமணம் செய்யவேண்டும் என முடிவெடுப்பது அவரவர் தனிப்பட்ட முடிவு. அதில் எந்த மாநிலச் சட்டமும் தலையிடல் கூடாது” எனத் தீர்ப்பெழுதினார்.

இறுதியில் 1967ஆண்டு முதல் இது போன்ற மாநிலச் சட்டங்கள் திருமணங்களைக் கட்டுப்படுத்தாது என அமெரிக்க நீதிமன்றம் உறுதி செய்தது.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “விசித்திர வழக்குகள் – பகுதி 11”

அதிகம் படித்தது