மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

விடுதலை சூரியனே!(கவிதை)

ராஜ் குணநாயகம்

Dec 3, 2016

siragu-fidal-castro2

தமிழினத்தின் சூரியன்

உதித்த வேளை

கியூபா தேசத்தின் சூரியனே

நீ மறைந்தாயோ!

உலகின் ஏகாதிபத்தியம்

உன்னை

எட்டி உதைக்கும் தூரத்தில் இருந்தும்

எட்ட முடியாமல்

சிம்ம சொப்பனமாய் இருந்த

அஞ்சா நெஞ்சனே

மாவீரனே!

உலகின் மூலை முடுக்குகளெல்லாம்

விடுதலை வீரர்களின் நெஞ்சினில்

விடுதலை தீயை பற்றவைத்த

விடுதலை வீரனே!

புரட்சியாளனே!

“வரலாறு என்னை விடுதலை செய்யும்”

என்று சொன்னாய்

வரலாறு; உன்னைவிடுதலை செய்தது அன்று……………..

கியூபா தேசத்தின் வரலாறும்

நவீன சோசலிசத்தின் வரலாறும்

என்றும் உன்னை சிறைப்படுத்தியே வைத்திருக்கும்

இனி நீயிலாது

அந்த வரலாறுகள் எழுதப்படாது!

எம் தேசத்தையும்

அந்த வரலாறே விடுதலை செய்யட்டும்…………….

இன்று

எம் மாவீரர் நாளில்

உனக்கும் சேர்த்தே

நெய் விளக்கு ஏற்றியிருப்போம்!

மறைந்த விடுதலை சூரியனே

நீ மீண்டும் எழுந்து வா

இன்றும்

அடிமை இருள் கவிந்து

அடிமை தேசங்கள் பல

சுதந்திர விடியல் காண

உன் உதயத்துக்காகக் காத்துக்கிடக்கின்றன……………..!

-ஈழன்-


ராஜ் குணநாயகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “விடுதலை சூரியனே!(கவிதை)”

அதிகம் படித்தது