மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் கைப்பைக்கு இனி பாதுகாப்பு முத்திரை தேவையில்லை



Dec 9, 2016

விமான நிலையங்களில் பயணிகளிடம் நடத்தப்படும் சோதனையில் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது மத்திய அரசு.

siragu-chennai-airport

7 கிலோ எடை வரையிலான உடைமைகளை விமானத்தில் பயணிக்கும் பயணிகள் எடுத்துச்செல்லலாம், அதற்கு மேல் உள்ள பொருட்களை சரக்கு பெட்டகத்தில் மட்டுமே எடுத்துச் செல்ல முடியும் என்று அறிவித்துள்ளது. மேலும் கைகளில் எடுத்துச் செல்லப்படும் கைப்பைகளுக்கு இனி பாதுகாப்பு முத்திரை பொருத்தப்படாது.

மின்னணு முறையை பயன்படுத்தி பயணச்சீட்டு வழங்கவும் முடிவு செய்துள்ளது. பயணிகளின் பயணச்சீட்டு அவரவர் அலைபேசிக்கு சென்று விடும், அதைக் காட்டினால் பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.

இம்மாற்றங்களை சென்னை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை போன்ற விமான நிலையங்களில் முதற்கட்டமாக செயற்படுத்த திட்டமிட்டுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் கைப்பைக்கு இனி பாதுகாப்பு முத்திரை தேவையில்லை”

அதிகம் படித்தது