மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

விவசாயிகள் எலிக்கறி உண்ணும் போராட்டத்தை மீண்டும் நடத்தினர்



Jan 31, 2017

பருவமழை இந்த ஆண்டு பொய்த்துப்போனதால் தமிழகத்தில் பெரும் வறட்சி ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீரும் இல்லாததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

siragu-farmers

இதனைத் தொடர்ந்து விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பினாலும் இறந்து வருகிறார்கள். எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு விவசாயிகளின் உயிரிழப்பு இந்த ஆண்டு 100-ஐ தாண்டியுள்ளது.

இதனால் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று(31.01.17) திருச்சியில் விவசாயிகள் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் எலிக்கறி திண்ணும் போராட்டம் நடத்தினார்கள். இப்போராட்டத்தில் பெண்கள் உட்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தில் விவசாயிகள் திருச்சி ஜங்ஷனில் இருந்து ரயில்வே நிலையம் வரை வாயில் எலியைக் கவ்வியபடி பேரணி நடத்தினர்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நடத்தப்பட்ட இப்போராட்டத்தில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பிப்ரவரி 7ம் தேதி தலைமைச்செயலகத்தை முற்றுகையிட்டு பாம்புக்கறி போராட்டம் நடத்தப்படும் என்றும், இதற்கும் நடவடிக்கை எடுக்காவிட்டால் டெல்லி சென்று மார்ச் 15ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்றும் விவசாயிகள் தலைவர் அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “விவசாயிகள் எலிக்கறி உண்ணும் போராட்டத்தை மீண்டும் நடத்தினர்”

அதிகம் படித்தது