மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

விவசாயிகள் கோரிக்கை: பயிரைக் காப்பாற்ற தண்ணீர் திறந்து விட வேண்டும்



Nov 23, 2016

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையிலிருந்து விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்கிறது. இங்கு அதிகம் நடைபெறுவது மஞ்சள் விவசாயம். பொதுவாக இங்கு 135 நாட்கள் திறந்து விடுவது வழக்கமாக இருந்து வந்த நிலையில் இம்முறை 28 நாட்கள் மட்டுமே பவானி சாகர் அணை, காளிங்கராயன் கால்வாயிலிருந்து எடுத்துவிடப்பட்டுள்ளது.

siragu-bhavani-sagar

எனவே பயிர்களைக் காப்பாற்ற 15 நாட்கள் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று ஈரோடு-கரூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் விவசாயிகள். இப்போராட்டம் நான்கு மணி நேரத்திற்கும் அதிகமாக நீடித்தது.

சென்ற வாரம் தண்ணீர் இல்லாமல் பயிர் வாடுவதைக் கண்டு ஈரோடு மாவட்டம் கொடுமுடி, கரட்டடிப் பாளையத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்ற விவசாயி தற்கொலை செய்துள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “விவசாயிகள் கோரிக்கை: பயிரைக் காப்பாற்ற தண்ணீர் திறந்து விட வேண்டும்”

அதிகம் படித்தது