மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு



Feb 28, 2017

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளித்தது மத்திய அரசு. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டம் வலுக்கிறது. இப்போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று பலரும் இணைந்துள்ளனர்.

Siragu neduvasal

இவ்வரிசையில் நெடுவாசல் அருகே உள்ள கோட்டைக்காடு என்ற பகுதியில் உள்ள மக்கள் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் கோட்டைக்காடு கிராமத்தில் மண்ணெண்ணெய் எடுக்கும் திட்டத்தை எதிர்த்தும் மூன்று நாட்களாக அக்கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 1991ம் ஆண்டு மண்ணெண்ணெய் எடுக்கும் திட்டம் கோட்டைக்காடு கிராமத்தில் தொடங்கப்பட்டது. அது பற்றி தெரியாத நிலையில் அப்போது ஆதரித்த அக்கிராம மக்கள் தற்போது அதன் விளைவால் ஏற்பட்ட பாதிப்பை அனுபவித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

இத்திட்டத்தால் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எண்ணெய் கசிவு ஏற்பட்டதை அடுத்து முறையற்ற முறையில் சரிசெய்து உள்ளனர். ஆதலால் அங்கு துர்நாற்றம் வீசுவதாகவும், அதனால் அச்சத்தில் உள்ளதாகவும் அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

இத்திட்டத்தை கொண்டு வந்த பிறகு அக்கிராமத்தில் 13க்கும் மேற்பட்டோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். அங்கு பிறக்கும் குழந்தைகள் ஊனமாக பிறப்பதாகவும், மூளை வளர்ச்சி குன்றி குழந்தைகள் பிறப்பதாகவும் அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு”

அதிகம் படித்தது