மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வெண்ணிலாவின் கங்காபுரம் நாவல் தரும் ஆளுமைப் பண்புகள்

முனைவர் மு.பழனியப்பன்

Mar 11, 2023

siragu-pen-ezhuthalargal2-150x150

கவிதைத் துறையில் கால் பதித்துத் தற்போது சிறுகதைகள், கட்டுரைகள், புதினங்கள் எழுதி வருகிறார். இவரின் கங்காபுரம் நாவல் கங்கை கொண்ட சோழபுரத்தை உருவாக்கிய பின்புலத்தைக் கதைக்களமாகக் கொண்டது.
ஐநூத்தி ஐம்பத்தி ஐந்து பக்கங்கள் கொண்ட புதினம் இது. முதல் பாகம், கங்காபுரம் ராஜேந்திரனின் மனதில் உருவான விதம். “அகவை ஐம்பதை தாண்டிய, பெயர்மைந்தர்களை பெற்றுவிட்ட ராஜேந்திர சோழனுக்கு, எந்த காரணத்தால் இளவரசு பட்டம் சூட்டாமல் காலம்தாழ்த்தினான் ராஜராஜசோழன்” என்பதை மிக விரிவாக, பல தளங்களில் வழியே விளக்குகிறது.

இரண்டாம் பாகம், கங்காபுரம் வடிவான விதம். கங்கைகொண்ட சோழபுரம் உருவாகக் காரணமான நிகழ்ச்சிகளை அவ்வாறு உருவாக்கும் போது ஏற்படும் சிடுக்குகளை, வாழ்நாள் முழுவதும் “பேரொளிக்குள் மங்கிய அகல் விளக்காய்” மனம் குமைந்து தத்தளிக்கும் ராஜேந்திர சோழனை, அரசனின் படைநகர்வுகளை, சித்தரிக்கிறது.

புதினம் துவங்கும் மார்கழி மாதத்து திருவாதிரை நாளில், ராஜேந்திர சோழனின் அரசகுரு தில்லை நடராஜர் ஆலயத்திற்க்குள் நுழைந்து, புலரிக்கு முன் தயாராய் இருக்கும் திருவாதிரைக் களியை புறக்கணித்து, ராஜேந்திர சோழனுக்கு பட்டம் சூட்டாமல் காலம் தாழ்த்தும் ராஜராஜனுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தில்லை கோவிலின் அர்த்த ஜாம பூஜையை நிறுத்த சொல்வதில் ஆரம்பித்து, ராஜேந்திரனின் இறப்பு வரை மூன்று தலைமுறை நிகழ்வுகளின் ஒட்டுமொத்த சித்திரமும் மிகைக்குறிப்புகள் அதீத கற்பனை வர்ணனைகள் இல்லாமல், இயல்பு மொழியில் விவரிக்கப்பட்டுள்ளது

’இளவரசு பட்டத்திற்காக ஐம்பது வயது வரை காத்திருந்தான் ராஜேந்திரன்’ என்று கிடைத்த ஒற்றை வரித் தகவல் ‘தஞ்சையை தாண்டி, கங்கைகொண்ட சோழபுரத்தில் எதற்காக தலைநகரமும் மற்றும் ஓர் ஆலயமும்?’ என்ற கேள்வியாய் மாறி, அதற்கான தேடுதலில் பின்தொடர்ந்த ராஜேந்திரனின் வாழ்க்கையும், அரசனின் அகப்போராட்டத்தின் விளைவே “கங்காபுரம்” .

தான் பட்டத்துராணிக்குப் பிறக்காததால் பிறப்பிலேயே இரண்டாமிடம்தான் தனக்கு விதிக்கப்பட்டிருக்கிறதோ என்று ராஜேந்திரன் புழுங்குகிறான். ஐம்பது வயதில் ஆட்சிக்குவந்து எண்பத்திரண்டு வயதுவரை ஆட்சிசெய்தும் ராஜராஜனின் நிழல் தன்மேலிருந்து விலகவில்லையே என்ற ஏக்கத்துடனேயே மடிகிறான். தஞ்சைப் பெருவுடையார் ஆலய கோபுரத்தைக் காட்டிலும் சோழீஸ்வரத்தின் கோபுரம் இரண்டடியாவது உயரமாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் தஞ்சைப் பெரியகோவிலைப் போன்ற தோற்றத்திலேயே அமைக்க ராஜேந்திரன் முயன்றிருக்கிறான். ஆனால் அவனின் எண்ணம் நிறைவேறவில்லை. இந்த இரண்டாம் இடம் என்பது சமுதாயத்தில் பெண்களுக்குத் தரப்பட்ட இடம் என்பதாலோ என்னவோ இந்தப் புதினச் சூழலை வெண்ணிலா தேர்ந்துகொண்டுள்ளார்.

அரண்மனைகளைத் தவிர்த்து மக்களோடு கலந்து புழங்குவது, புதிய தலைநகரம், புதிய பெருங்கோவில் என்று தன்னைத் தந்தையிடமிருந்து வேறுபடுத்திக்காட்ட அவன் முயன்ற ஒவ்வொன்றும் அவனை இன்னும் வலுவாக ராஜராஜனின் பெயருடன் இணைத்துப் பார்க்கப்படவே செய்துவிடுகிறது. விலகுவோம் என்ற எண்ணமே ஒன்று சேர்த்து வைத்துவிடுகிறது.

இவ்வாறு பெண் புதினங்கள் சிலவற்றை இந்நேரத்தில் ஆராய்ந்து அவற்றில் இருந்து ஆளுமைக் கருத்துகளைப் பெறமுடிகின்றது.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வெண்ணிலாவின் கங்காபுரம் நாவல் தரும் ஆளுமைப் பண்புகள்”

அதிகம் படித்தது