மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வைகோ: மக்கள் நல கூட்டணியிலிருந்து வெளியேறியது ம.தி.மு.க



Dec 27, 2016

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இனைந்து மக்கள் நலக் கூட்டியக்கம் உருவாக்கப்பட்டது. இது சென்ற சட்டமன்றத் தேர்தலின் போது மக்கள் நலக் கூட்டணியாக மாறியது. இதில் தே.மு.தி.க-வும், த.மா.கா சேர்ந்தன.

siragu-vaiko

சட்டமன்றத் தேர்தலில் இந்த ம.ந.கூட்டணி தோல்விக்குப் பின் இதில் இடம்பெற்ற கட்சிகள் தனித்தனியே தங்களது நிலைப்பாட்டை மேற்கொண்டன.

இந்நிலையில் ம.தி.மு.க-வின் உயர்நிலைக் குழுக் கூட்டம் சென்னை அண்ணாநகரில் உள்ள வைகோ இல்லத்தில் நடைபெற்றது. இதில் உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டணியிலிருந்து மதிமுக விலகுவதாக முடிவு எடுக்கப்பட்டது. எனினும் அக்கட்சி தலைவர்களுடன் நட்பு தொடரும் என வைகோ தெரிவித்துள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வைகோ: மக்கள் நல கூட்டணியிலிருந்து வெளியேறியது ம.தி.மு.க”

அதிகம் படித்தது