மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: மதுரையில் இளைஞர்கள் போராட்டம்



Mar 30, 2017

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் போராட்டம் நடைபெற்றது. மத்திய, மாநில அரசின் பேச்சுவார்த்தைக்குப் பின் இப்போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

Siragu-neduvasal2

இதையடுத்து தமிழ்நாடு உட்பட நாடுமுழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை துவங்குவதற்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டது. இதனால் நெடுவாசல் மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து ஆலோசனையில் உள்ளனர்.

இதனையடுத்து மதுரை தல்லாக்குளத்தில் உள்ள ஐஓசி அலுவலகத்தின் வாயிலில் இளைஞர்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினரை மீறி அலுவலகத்தினுள் சென்றவர்களை கைது செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: மதுரையில் இளைஞர்கள் போராட்டம்”

அதிகம் படித்தது