நவம்பர் 26, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

10, 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவரும் தேதி அறிவிக்கப்பட்டதுFeb 23, 2017

பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 12ம் தேதி வெளிவரும். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளிவரும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

Siragu exam

ஏப்ரல் 29ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வும், ஏப்ரல் 30ம் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வும் நடைபெறும் என்றும் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

மார்ச் மாதம் தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், அதற்கான பணிகள் தற்போது முடிவடைந்து உள்ளது. பன்னிரெண்டாம் வகுப்புக்கான செய்முறை தேர்வு கடந்த 6ம் தேதி துவங்கியுள்ளது. மார்ச் 2ம் தேதி நடைபெற உள்ள பன்னிரெண்டாம் வகுப்புக்கான தேர்வில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுத உள்ளனர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “10, 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவரும் தேதி அறிவிக்கப்பட்டது”

அதிகம் படித்தது