மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

104 செயற்கைகோள்களை விண்ணிற்கு அனுப்பி இஸ்ரோ உலக சாதனை



Feb 15, 2017

இந்திய விண்வெளி ஆய்வுத்துறையான இஸ்ரோ 104 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி – சி 37 ராக்கெட்டை ஒரே நேரத்தில் விண்ணில் ஏவியது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஸ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து ஏழு நாடுகளைச் சேர்ந்த 104 செயற்கைக்கோள் தாங்கிய சி37 ராக்கெட் இன்று(15.02.17) காலை 9.28 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

Siragu 104 Satellites

இந்த ராக்கெட் 320 டன் எடையும், 44.4 மீட்டர் உயரமும் கொண்டது. இதில் நமது நாட்டைச் சேர்ந்த 2 நானோ வகை செயற்கைகோள்களும், வெளிநாடுகளைச் சேர்ந்த 101 நானோ வகை செயற்கைகோள்களும் உள்ளன.

சட்டவிரோதமாக மீன்பிடித்தல் மற்றும் கடற்கொள்ளை போன்றவற்றை கண்காணிக்க இந்த செயற்கைகோள்கள் பயன்படுத்த உள்ளது. இதற்காக இதில் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது பூமியிலிருந்து 505 மீட்டர் தூரத்தில் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது.

இதற்கு முன்பு ரஷ்யா 2014ம் ஆண்டு 37 செயற்கைகோள்களை விண்ணிற்கு அனுப்பிய விண்வெளி சாதனையை இஸ்ரோ முறியடித்துள்ளது. இதற்கு முன்பு இந்தியா ஒரே நேரத்தில் 20 செயற்கைகோள்களை விண்ணிற்கு செலுத்தியது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “104 செயற்கைகோள்களை விண்ணிற்கு அனுப்பி இஸ்ரோ உலக சாதனை”

அதிகம் படித்தது