செப்டம்பர் 19, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ்May 22, 2017

பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தமிழக பள்ளிக் கல்வித்துறை பல மாற்றங்களைக் கொண்டுவந்தது. இதைத் தொடர்ந்து தமிழக அரசின் பாடத்திட்டம் தரமானதாக இல்லை என்றும், நீட் போன்ற மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தேர்வுகளை எதிர்கொள்வதற்கு தமிழக மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Siragu plus 2 result

இதையடுத்து பாடத்திட்டம் மாற்றம் குறித்து தமிழக அரசு அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு என்று இரண்டு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் பதினோராம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

10, 11 மற்றும் 12 வகுப்புகள் என்று மூன்று பொதுத்தேர்வை மாணவர்கள் சந்திக்க உள்ளதால் 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் அளிக்கப்போவதாக முடிவு எடுக்கப்பட உள்ளது. 11 மற்றும் 12 வகுப்புகளுக்கானத் தேர்வில் பாடவாரியான மொத்த மதிப்பெண் 200 லிருந்து 100 ஆக குறைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என்று தெரியவருகிறது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ்”

அதிகம் படித்தது