மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

17-வது நாளாக நீடிக்கும் நெடுவாசல் போராட்டம்: பெண்கள் கும்மியடித்து போராட்டம்



Mar 4, 2017

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 17-வது நாளாக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நெடுவாசல் போராட்டத்தின் 17-வது நாளான இன்று பெண்கள் தலைமையில் கும்மியடித்து நூதன முறையில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

Siragu-neduvasal2

இப்போராட்டத்தை பல்வேறு வடிவங்களில் நடத்தி வருகிறார்கள். மனித சங்கிலி போராட்டம், பறையடித்து போராட்டம், நடனமாடி போராட்டம் என்று பல்வேறு வழிகளில் நடத்தி வருகிறார்கள். நெடுவாசலில் மழை பெய்த பொழுதும்கூட மக்கள் அசையாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

விவசாய நிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று 17- வது நாளாக நெடுவாசல் போராட்டம் நடந்து வரும் நிலையில், இன்று(04.03.17) ஒ.என்.ஜி.சி இயக்குனர் திவேதி, இத்திட்டத்தால் நிலத்தடி நீர் பாதிக்காது, மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறி வருகிறார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “17-வது நாளாக நீடிக்கும் நெடுவாசல் போராட்டம்: பெண்கள் கும்மியடித்து போராட்டம்”

அதிகம் படித்தது