நவம்பர் 26, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

2 தமிழ் மாணவர்கள் இலங்கை போலிசால் சுட்டுக்கொலைOct 25, 2016

இலங்கை போலிசால் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் 2 மாணவர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். இதை கண்டித்து இன்று வடக்கு மாகாணத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.

siragu-srilanga

இலங்கை போலீசார் இனவெறியால் 2மாணவர்களை சுட்டுக்கொலை செய்துவிட்டு, விபத்து என்று தெரிவித்துவிட்டனர். அதனால் பொதுமக்களும், மாணவர்களும் போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து அந்த இரு மாணவர்களுக்கு நடந்த பிரேத பரிசோதனையில் அவர்கள் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

இக்கொலையை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஆளுநர் அலுவலகம் முன்பும் மாணவர்கள் முற்றுகையிட்டனர்.

இன்று வடக்கு மாகாணம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதனால் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. மருந்து கடைகள் தவிர அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இதனால் வடக்கு மாகாணத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “2 தமிழ் மாணவர்கள் இலங்கை போலிசால் சுட்டுக்கொலை”

அதிகம் படித்தது