மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

2000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கக்கோரிய மனு தள்ளுபடிFeb 24, 2017

கடந்த நவம்பர் 8ம் தேதி பழைய 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து புதியதாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்பட்டது.

Siragu cash withdrawal1

புதிய 2000 ரூபாய் நோட்டில் தேவநகரி எண் அச்சிடப்பட்டுள்ளதால், அதனை செல்லாது என்று அறிவிக்கக்கோரி மதுரையைச் சேர்ந்த கேபிடி.கணேஷ் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறி தேவநகரி எண் புதியதாக வெளியிடப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் இம்மனுவை தள்ளுபடி செய்துள்ளது மதுரை உயர்நீதிமன்றம்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “2000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கக்கோரிய மனு தள்ளுபடி”

அதிகம் படித்தது