சனவரி 13 , 2018 இதழ்
தமிழ் வார இதழ்

2012 மாயர்கள் கணக்கால் அழியுமா பூமி?

ஆச்சாரி

Feb 15, 2012

2012 ஆம் ஆண்டு பூமிக்கு என்னவாகும் என்ற அச்சம் பலரது மனதில் தொற்றிக்கொண்டுள்ளது, மாயன் இனத்தவரின் தேதி அட்டவணை கணிப்பின்படி 2012 டிசம்பர் மாதம் 21 ஆம் தேதியுடன் அவர்களின் கால அட்டவணை நிறைவுக்கு வருகிறது. இதனால் இதன்பின் உலகம் அழிவுக்கு வருமென்று பலர் அச்சப்படுகின்றனார், இதை மையமாக வைத்து சில திரைப்படங்களும் வெளி வந்தன. உண்மையில் உலகம் அழியுமா, வாருங்கள் பார்ப்போம்.

பூமி தோன்றியது எப்படி ?

12500 கோடி ஆண்டுகளுக்கு முன் ஒரு அணு அளவில் இருந்து வெடித்துச் சிதறி இந்த பிரபஞ்சம் உருவானது என்கின்றனர் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள். வெடித்துச் சிதறிய ஒளிப் பிழம்பின், ஒரு பிழம்பு சூரியனாக மாறியது.  இந்த வெடிப்பிற்குப் பின்னர் விண்வெளியில் இருந்த மாசு மற்றும் வாயுக்கள் வேகமாக ஒளிப் பிழம்பைச் சுற்றி அதிவேகத்தில் சுற்ற ஆரம்பித்தன. விண் வெளியில் சுற்றிய இந்த மாசுக்கள் ஒன்றோடு ஒன்று மோதி ஒரு பெரிய திடமுள்ள பொருளாக மாறியது. இது ஏற்புடையாதாக இல்லை, ஏனெனில் ஒரு திடப்பொருள் மற்றொரு திடப்பொருளுடன் மோதுவதால் திடப்பொருள் சிதைந்து விடும்.  2003 ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சியாளர் டான் பெடிட் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் புவி ஈர்ப்பு அற்ற தன்மையில், ஒரு நெகிழி(plastic) பையில் உப்பை போட்டு குலுக்கி ஒரு சோதனையை மேற்கொண்டார், சிறிது நேரத்தில் உப்பு துகள்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று ஈர்க்கப்பட்டு ஒரு சிறு பந்து வடிவத்தை அடைந்தது என்பதை கண்டறிந்தார். ஆகவே இவ்வாறு சுற்றிய வாயு மாசுக்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமி உருவானது. அன்றிலிருந்து இன்று வரை பூமி ஏராளமான மாறுதலுக்கு உள்ளாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் சூரியனைச்சுற்றி பிற பிரபஞ்ச கோள்களும் சுற்றி வந்தன, அவற்றுள் ஒன்றான புதன் அளவு கொள்ளளவு கொண்ட கோள், வேகமாக பூமியின் வெளிப்புறத்தில் மோதிச் சென்றது, இதனால் பூமியின் மேற்பரப்பில் உள்ள உலோகம் மற்றும் தாதுக்கள் பல இலட்ச மைல்கள் தூரம் சிதறி எறியப்பட்டது.

மோதிச்சென்ற கோள் இந்த கனிம தாதுக்களை தன் பக்கம் இழுத்து பல ஆயிரம் வருடங்களுக்கு பின் உருமாறி நிலவாக மாறியுள்ளது, புவியின் மேற்பரப்பில் உள்ள இரும்பு உலோகத்தின் வலிமை புவியின் அடிப்பரப்பில் உள்ள இரும்பு உலோகத்தை விட மெலிவானது. நிலவில் கண்டறியப்பட்ட இரும்பு உலோகத்தின் வலிமை புவியில் உள்ள இரும்பின் வலிமையை விட குறைவானாதாகவே உள்ளது என்பதே நிலவு பூமியின் மேற்பரப்பில் இருந்து அடித்து செல்லப்பட்ட உலோகம் மற்றும் தாதுக்களை கொண்டுள்ளது என்பதற்கான சான்று. பூமி அவ்வப்போது விண்வெளி துகள்களால் (meteorites)  தாக்கப்படுவது வழக்கமாக இருந்தது. இந்த விண்வெளி துகள்கள் தன்னுள் நீரை கொண்டிருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. எண்ணற்ற விண்வெளி துகள்கள் பூமியை தாக்கியதாலே, பெருங்கடல்கள் உருவாகி உள்ளதாக அறிவியலார்கள் நம்புகிறார்கள்.

2012 பூமிக்கு ஏற்படும் ஆபத்துக்கள்

சூரிய கதிர் வீச்சு (Solar Flare)

சூரியன் ஒவ்வொரு 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை தன் காந்தபுலத்தை மாற்றும் தன்மையை கொண்டுள்ளது. வடக்கு தெற்காக உள்ள புலம் தெற்கு வடக்காக மாறும். இந்த மாற்றத்தின் பொழுது சூரியனின் மேற்பரப்பிலிருந்து கதிர்வீச்சு அதிகளவில் வெளிப்படும். 2012 ஆம் ஆண்டு சூரியன் தன் காந்த புலத்தை மாற்றவிருக்கிறது. இந்த மாற்றத்தினால் சூரியனின் மேற்பரப்பில் கதிர்வீச்சின் தாக்கம் அதிகமாக இருக்கும். கடைசியாக 2001 ஆம் ஆண்டு சூரியன் தன் காந்த புலத்தை மாற்றியது. அப்போது வெளிப்பட்ட கதிர்வீச்சின் திசையில் (firing line) பூமி இல்லை, ஆகவே பூமி பாதிப்படையவில்லை. ஒருவேளை இந்த கதிர்வீச்சின் நேரடி திசையில் புவி இருப்பின் பின்வரும் பாதிப்புகளை நாம் சந்திக்க வேண்டியுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

 

  1. செயற்கை கோள்கள் செயலிழந்து விடும்
  2. அணு உலைகள் பாதிக்கப்படும்
  3. மின்சார விநியோகம் பாதிக்கப்படும்
  4. இணையம் பெருவாரியாக பாதிக்கப்படும்
  5. விமான போக்குவரத்து பாதிக்கப்படும்
  6. வங்கிகளின் வர்த்தக பரிமாற்றம் பாதிக்கப்படும்
  7. வலை தல பொருளாதாரம் பாதிக்கப்படும்
  8. அலை பேசி வசதி பாதிக்கப்படும்
  9. சுருக்கமாக கூறினால் மின்சாரம் மற்றும் செயற்கைக்கோள்களை நம்பி உள்ள அனைவரும் பாதிப்படைவார்கள்

இதன் மூலம் 2 இலட்சம் கோடி அமெரிக்க வெள்ளி அளவிலான  பாதிப்புகள் ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது

இதற்கு முன் சூரிய கதிர்வீச்சு 1859 ஆம் ஆண்டு நடை பெற்றது, அன்றைய தினம் இந்த கதிர்வீச்சு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது, தபால் தந்தி சேவையை முழுவதுமாக பாதித்தது. 2003 ஆம் ஆண்டு ஒரு மிகச்சிறிய கதிர்வீச்சு தென் ஆப்பிரிக்க நாட்டை தாக்கியதில் சில இடங்களில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டது. 15 ஆண்டுகளுக்கு முன் கனடா நாட்டில் ஒரு நகரம் இதனால் பாதிக்கப்பட்டது. இந்த தருணங்களில் கதிர்வீச்சு அளவு மிக மிக சிறியதாக இருந்தது.

100 வருடங்களுக்கு ஒரு முறை இந்த சூரிய கதீர்வீச்சின் அளவு அதிகமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் மத்தியில் நம்பப்படுகிறது.  மேலும் சூரிய கதிர்வீச்சின் மூலம் ஏற்படும் பாதிப்பை பெரும்பாலான விஞ்ஞானிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

மைய பிரபஞ்ச ஈர்ப்பு வளையத்தால் பாதிப்பு

பிரபஞ்சங்கள் அனைத்தும் ஒரு மைய ஈர்ப்பு விசையால் (block hole ) ஈர்க்கப்பட்டு சுழன்று கொண்டுள்ளது. இந்த ஆண்டு புவி மைய ஈர்ப்பு விசையின் நேர்கோட்டில் வருகிறது. இதனால் புவியின் காந்த புலம் சிறிது பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று சில விஞ்ஞானிகளின் கருதுகிறார்கள். மேலும் புவியின் காந்த புலம் சிறிது மாறுமேயானால் தட்ப வெப்ப நிலையில் சில மாறுதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் கருதுகின்றனர். ஆனால் சில விஞ்ஞானிகள் புவியின் காந்த புலம் பாதிக்கபட்டாலும் புவியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

தற்பொழுது பூமியின் வயது அரை ஆயுள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் அரை ஆயுள் வரை பூமி நிலைத்திருக்கும் என்பதே பெரும்பாலான விஞ்ஞானிகளின் கருத்து. மாயன் தேதி அட்டவணை என்பது அவர்களின் தேதியை குறிப்பதாக மட்டுமே உள்ளது என்றும் இந்த நிகழ்வு மற்ற ஆங்கில கால அட்டவணை போன்றதே என்றும், மாயன் தேதி அட்டவணை முடிவடைவதால் பூமி அழிந்து விடும் என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் இல்லை என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள்.

சில இயற்கை சீரழிவுகளை தாண்டி இந்த பூவுலகம் 2013 ஆம் ஆண்டை நிச்சயம் வரவேற்கும் என்று நம்புகிறேன்.

Later references could use the abbreviation, a shortened version of the pro-essay-writer.com name or a generic word

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “2012 மாயர்கள் கணக்கால் அழியுமா பூமி?”

அதிகம் படித்தது