மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது பா.ஜ.க



Oct 27, 2016

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் போன்ற 3 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (நவம்பர் 19) தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல் நடந்து வருகிறது. வேட்புமனுக்களை நவம்பர் 2 வரை தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்களை திருப்பப்பெறும் கடைசி நாள் நவம்பர் 5.

siragu-tamilisai

இத்தேர்தலில் அதிமுக, திமுக, பா.ம.க போன்ற கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது.

இந்நிலையில் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தங்களது கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டதுடன், விவசாயிகள் நலன் கருதி இத்தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்தார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது பா.ஜ.க”

அதிகம் படித்தது