மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

4 சட்டசபை தேர்தலிலும் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்



Nov 19, 2016

தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி போன்ற மூன்று சட்டமன்ற தொகுதிகளும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் நடந்து வருகிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

siragu-election

இத்தேர்தல் நடைபெறும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில் பறக்கும் படையினர், காவல் துறையினர், துணை ராணுவப்படையினர் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாக்குப்பதிவில் 3 மணியளவில் அரவக்குறிச்சியில் 73 சதவீதமும், தஞ்சையில் 60 சதவீதமும், திருப்பரங்குன்றத்தில் 62 சதவீதமும் பதிவாகியுள்ளது.

புதுச்சேரி- நெல்லித்தோப்பு தொகுதியில் 3 மணி நிலவரப்படி 77 சதவீதம் பதிவாகியுள்ளது. இவ்வாக்குப்பதிவு இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. இந்த நான்கு தொகுதிகளிலும் வரும் நவம்பர் 22 ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவு அறிவிக்கப்படும்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “4 சட்டசபை தேர்தலிலும் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்”

அதிகம் படித்தது