மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

5 மாநில சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது



Mar 11, 2017

சமீபத்தில் உத்திரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா போன்ற ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. நடந்து முடிந்த ஐந்து சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணி இன்று(11.03.17) நடைபெற்று வருகிறது. ஓட்டு எண்ணும் மையங்களில் தகுந்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Siragu vote1

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இம்மாநிலத்தில் பா.ஜ.க 312 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இங்கு சமாஜ்வாதி காங்கிரஸ் கூட்டணி 66 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 19 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக 57 தொகுதிகளிலும், காங்கிரஸ் 11 தொகுதிகளிலும், மற்றவை 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் 76தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 24 தொகுதிகளிலும், அகாலிதளம் 17 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் காங்கிரஸ் 23 தொகுதிகளிலும், பாஜக 21 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

கோவா மாநிலத்தில் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக 12 தொகுதிகளிலும், மற்றவை 8 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “5 மாநில சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது”

அதிகம் படித்தது