500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பாகிஸ்தானுக்கு ரூ.500 கோடி இழப்பு
Nov 10, 2016
கள்ளநோட்டுகளை ஒழிக்கும் வகையில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். போலி இந்திய நோட்டுகள் தயாரிக்கும் பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இந்த மோடியின் அறிவிப்பு ரூ 500 கோடி இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு 1600கோடி போலி ரூபாய் நோட்டுகள் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்ததாக உளவுத்துறை அறிவித்திருந்தது.
ரிசர்வ் வங்கிக்கு ஒரு ஆயிரம் ரூபாயை தயாரிக்க ரூ.29 செலவாகிறது. பாக்., ஒரு ஆயிரம் ரூபாயை தயாரிக்க ரூ.39 செலவு செய்கிறது. இதன் மூலம் பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ க்கு ரூ. 500 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்போது மோடியின் இந்த அதிரடி நடவிக்கையால் பாகிஸ்தானுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பாகிஸ்தானுக்கு ரூ.500 கோடி இழப்பு”