மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

6-வது நாளாக நடைபெறும் லாரிகள் வேலை நிறுத்தம்



Apr 4, 2017

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி, காப்பீடு கட்டண உயர்வு, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கட்டண உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் சென்ற மார்ச் 30ம் தேதி முதல் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Siragu lorry-strike

தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா ஆந்திரா போன்ற ஐந்து மாநிலங்களிலும் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. இதனால் அத்யாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் தலைமைச்செயலகத்தில் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. லாரி உரிமையாளர்கள் கோரிய மூன்று கோரிக்கைகளில் இரண்டு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற முடியும் என்று உறுதி அளித்துள்ளதால் லாரி வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாகக் கூறினர்.

எனினும் இந்த போராட்டம் தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தால் அறிவிக்கப்பட்டு நடத்தப்படுவதால், மற்ற மாநிலங்களில் வேலை நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதால், தமிழகத்தில் மட்டும் வாபஸ் பெற முடியாது. எனவே தமிழகத்திலும் போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டத்தில் எரிவாயு டாங்கர் லாரிகள், பால், தண்ணீர், மருந்து பொருட்கள் ஏற்றி செல்லும் லாரிகள் வழக்கம் போல் இயங்குகிறது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “6-வது நாளாக நடைபெறும் லாரிகள் வேலை நிறுத்தம்”

அதிகம் படித்தது