ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

7 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படைDec 20, 2016

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களை கைது செய்து வருவதைத் தொடர்ந்து செய்து வருகின்றனர் இலங்கைக் கடற்படையினர். மேலும் மீனவர்களின் படகுகளையும், வலைகளையும் சேதப்படுத்தி வருகின்றனர். இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க மிகுந்த அச்சத்துடன் செல்கின்றனர்.

siragu-tamil-fisherman

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 7மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கைக் கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி அந்த 7மீனவர்களையும் கைது செய்தனர். அத்துடன் அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் அங்கு மீன் பிடித்துக்கொண்டிருந்த ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “7 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை”

அதிகம் படித்தது