மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இணைய வணிக நிபுணர் கந்தசாமி அவர்களின் நேர்காணல்

சிறகு நிருபர்

May 9, 2015

kandasaami nerkaanal3கேள்வி: தங்களைப் பற்றிக் கூறுங்கள்?

பதில்: எனது பெயர் ப.கந்தசாமி. நான் இணையம் மூலமாகவும், இணையத்தை பயன்படுத்தி எந்த அளவிற்கு வணிகம் செய்யலாம் என்பதை நானே அனுபவித்ததினால், அதை நான் மக்களுக்கு அதிகம் பரப்பும் எண்ணத்துடன் கல்லூரி மற்றும் தொழில் நிறுவனங்கள் மூலமாக நிறைய நிகழ்ச்சிகளை நடத்தி மக்களுக்கு என் அனுபவத்தை விரிவாக எடுத்துச்சொல்ல ஆசைப்படுகிறேன். அந்த எண்ணத்துடன் கல்லூரி மற்றும் தொழில் நிறுவனங்கள் மூலமாகவும் நிறைய நிகழ்ச்சிகள், நடந்துகொண்டிருக்கிறது. 1992லிருந்து இந்த மின்னஞ்சல் மூலம் கணிணித் துறையில் நுழைய நேரிட்டது. அதன் மூலம் இணையம் இந்தியாவிற்கு வரும் முன்பே அதைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. அந்த அனுபவத்தினால் எனது தொழிலுக்கு இந்த இணையத்தையும் கணிணியையும் எப்படி உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்ற அனுபவம் கிடைத்தது.

கேள்வி: நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்?

பதில்: கணிணி மூலமாக இணையம் வழியாக மென்பொருளோ அல்லது நமக்கு என்ன தகுதி இருக்கிறதோ அதை பயன்படுத்தி மென்பொருள் (Software Development) செய்வது, இணையம் மூலமாக மக்களுக்கு என்னென்ன சேவையை செய்யலாம் என்பதை செய்துவருகிறேன்.

கேள்வி: சிறு மற்றும் குறுந்தொழில் பொருட்களை இணையம் வழியாக எப்படி சந்தைப்படுத்துவது?

http Addressபதில்: முதன்முதலில் எப்படி ஒரு தொழில் துவங்குவதற்கு முன்னால் பதிவுசெய்தல், வணிக அட்டை (Business card) செய்கிறோமோ, அதுபோல இணையம் மூலமாக தொழில் செய்ய விரும்புவோர் அல்லது அவர்களது தனித் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் அவர்களுடைய முகவரியை பதிவு செய்யவெண்டும். இப்பொழுது சாதாரணமாக சமூக வலைதளம் வந்ததால் முகவரி பயன்படுத்தத் தேவையில்லை, முகநூலிலே நான் கணக்கு ஆரம்பித்துக்கொள்கிறேன் என்ற நோக்கத்துடன் இருக்கிறார்கள். அது குறுகிய காலத்துக்கு இருக்கலாம், சொல்லமுடியாது. அதெல்லாம் சமீப காலமாக வந்த ஒரு புதிய தொழில்நுட்பம். ஆனால் இந்த இணைய முகவரி என்பது இணையம் வந்த காலத்திலிருந்து அதாவது .com, .in, .org என்று சொல்கிறோம் இல்லையா அந்த முகவரி எல்லாம் இணையம் வந்த காலத்திலிருந்தே இருந்துகொண்டிருக்கிறது. எவ்வளவு பெரிதாக நமது தொழில்நுட்பம் மாறினாலும் அலைபேசி இல்லாத காலத்திலிருந்தே எப்பொழுதெல்லாம் நாம் மின்னஞ்சல் பயன்படுத்த ஆரம்பித்தோமோ அப்பொழுதிலிருந்தே இந்த இணையதள முகவரி அதாவது website address என்று சொல்லுவோம் அதனை பதிவு செய்யவேண்டும். இணையத்தின் மூலமாக தொழில் செய்ய விரும்புபவர்கள் எல்லோரும் .com, .in முகவரியை பதிவுசெய்ய வேண்டும். நிறைய நபர்களுக்கு அதன் முக்கியத்துவம் தெரிவதில்லை.

ஏனென்றால் இன்றைக்கு நம் தொழில்நுட்பம் என்ன இருக்கிறதோ அதை பயன்படுத்தியே நாம் செய்துகொள்ளலாம் இணைய முகவரி தேவையில்லை என்று நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் அதுதான் நமக்கு நிரந்தரமான முகவரி. எப்படி நாம் சொந்த வீடு, சொந்த கார் வைத்திருப்பது போல் ஒரு சொந்த இணைய முகவரி அனைவருக்கும் தேவை. அது தனிப்பட்ட மனிதனாகவும் இருக்கலாம், குறுந்தொழில் செய்ய வருபவர்களுக்கு முக்கியமாக தொழில் செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள், முக்கியமாக சிறுதொழில் ஏனென்றால், பெரிய நிறுவனங்கள் ஏற்கனவே பிரபலமாக இருக்கும், அதனது முகவரியை தட்டச்சு செய்து சாதாரணமாகவே தேடி வந்துவிடுவார்கள். சிறுதொழில் புரிபவர்கள் தாங்களே தங்களைதான் வெளிப்படுத்தியாகவேண்டும், அப்பொழுது இந்த முகவரி கண்டிப்பாக தேவைப்படுகிறது. இன்னொருவரிடம் சொல்லும் பொழுதோ, அல்லது வணிக அட்டை (Business card)ல் போடும்போழுதோ, மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளும் பொழுதோ இந்த முகவரி கண்டிப்பாக பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும்.

நாம் எப்படி தொழிலுக்கு ஒரு பெயர் வைக்கிறோமோ அதேமாதிரி இந்த இணைய முகவரிக்கு அது சம்பந்தமான ஒரு இணையதள முகவரி அதாவது domain name என்று சொல்வார்கள் அதுதான் இணைய முகவரி, இதனை domain name-ஐ கண்டிப்பாக முக்கியமாக பதிவுசெய்தே ஆகவேண்டும். இணையமுகவரியை பதிவுசெய்த பின் அவர்களைப் பற்றிய விவரங்களை, அதாவது யார் அந்த நிறுவனத்தை துவங்குகிறார்கள், அவர்கள் பற்றிய செய்தி, அனுபவம் என்ன, என்னென்ன பொருட்கள் வைத்திருக்கிறார்கள், என்னென்ன சேவைகள் செய்யவேண்டும் என நினைக்கிறார்களோ அதன் விவரங்கள், இணையதளத்தைப் பார்க்கிறவர்கள் எப்படியெல்லாம் தொடர்பு கொள்ளலாம் (Contact Address) என்பதை கண்டிப்பாக சேர்க்க வேண்டும். இந்தத் தகவல்கள் எல்லாம் ஒரு இணையதளமாக ஏற்படுத்தி இணையதளத்தில் போட்டார்கள் என்றால் கண்டிப்பாக பல லட்சக்கணக்கான மக்கள் பார்ப்பதற்கு வாய்ப்பு உண்டு. முன்பெல்லாம் யாரையாவது பார்த்தால் brochure அனுப்புவோம், ஏதாவது கண்காட்சிக்குச் சென்றால் பார்ப்பவர்களிடம் எல்லாம் ஒரு brochure -ஐ கொடுப்போம். இப்பொழுது காலம் மாறிவிட்டது, எல்லோருமே உங்களது இணைய முகவரி என்ன என்றுதான் கேட்பார்கள். brochure-ஐ யாரும் பயன்படுத்துவது இல்லை. நாம் மின்னஞ்சல் அனுப்பும் பொழுதும் இலவச மின்னஞ்சல் மூலமாக அனுப்பாமல் நம்முடைய சொந்த மின்னஞ்சல் முகவரியிலிருந்தே மின்னஞ்சல் அனுப்பினால் இன்னும் நம்முடைய இணையதளம் பிரபலமாவதற்கு அதிக வாய்ப்பு உண்டு.

கேள்வி: தங்களது தொழிலை இணையம் மூலம் எப்படி விரிவுபடுத்தலாம்?

kandasaami nerkaanal4பதில்: தாங்கள் இணையதளம் அமைத்தபிறகு, இணையத்தில் உங்களுக்கென்று ஒன்று இருக்கிறது என்பதை நீங்கள் பிரபலப்படுத்தியாக வேண்டும். ஒன்று நீங்கள் யார் யாரிடம் எல்லாம் தொடர்பில் இருக்கிறீர்களோ அவர்களுக்கெல்லாம் ஒரு மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது குறுஞ்செய்தி அனுப்பலாம், நாங்கள் புதிதாக ஒரு இணையதளத்தை துவங்கியிருக்கிறோம் என்று. ஏற்கனவே தொழில் செய்துகொண்டிருப்பவர்கள் வாடிக்கையாளர் database வைத்திருப்பார்கள். தொழில் ஆரம்பிக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் அவர்களது தொடர்பில் உள்ளவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக தொடர்பு வைத்திருப்பார்கள். அவர்களிடம் எல்லாம் நாங்கள் புதிதாக இணையதளத்தை ஆரம்பித்திருக்கிறோம் என்று தன்னுடைய இணையதள முகவரிக்கு மக்களை ஈர்க்க வேண்டும். இப்பொழுது கோடிக்கணக்கான இணையமுகவரி வந்துவிட்டது.

நம்மைப்போல போட்டியாளர்கள் நிறைய நபர்கள் நம்மைப்போலவே நிறைய முகவரி வைத்திருப்பதால் நமக்கு இணையத்திலேயே போட்டிகள் நிறைய இருக்கிறது, தொழில் முறையில் போட்டிகள் இல்லாமல் ஒவ்வொருவருக்குள்ளும் போட்டி வந்துவிட்டது. கூகுளில் சென்று தேடல் (search) செய்தால் என்னுடைய இணையதளம் வரவேண்டுமா அல்லது போட்டியாளரின் இணையதளம் வரவேண்டுமா என்ற போட்டி இருப்பதால் இணையதளத்தை பிரபலப்படுத்த வேண்டும். அதற்கு முதல்முறையாக ஒரு தொழிலைப் பற்றிய தகவல் வேண்டுமென்றால், ஒரு தனிப்பட்ட முறையில் தகவல் வேண்டுமென்றால் கூகுளுக்குள் சென்றுதான் தேடும் காலகட்டம் வந்துவிட்டது. அப்படி இருக்கும் பொழுது கூகுளில் உங்களுடைய தொழில், உங்களுடைய பொருட்கள், உங்கள் சம்பந்தப்பட்ட சேவைகள் இவற்றைத் தேடினார்கள் என்றால் உடனடியாக, Top10 Rank என்று சொல்வார்கள், கூகுளில் தேடினீர்கள் என்றால் 10 முகவரிக்குள் உங்களது இணையதளமும் வந்தால்தான் உங்கள் தொழிலை மேம்படுத்த வாய்ப்பு இருக்கிறது.

kandasaami nerkaanal6Top10 ல் கொண்டு செல்வதற்கு கூகுள் சில வழிமுறைகளை வைத்திருக்கிறார்கள், உங்களது இணையதளம் இப்படியெல்லாம் தான் வடிவமைத்திருக்க வேண்டும் என்று. சில ஆண்டுகள் வரை  பார்த்தீர்கள் என்றால் கணிணியில்தான் இணையதளத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள், இப்பொழுது பெரும்பாலான நபர்கள் கைப்பேசியில் (Mobile phone)பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். கூகுளே ஒரு வரைமுறை கொடுத்திருக்கிறார்கள். உங்களது இணையதளத்தை நீங்கள் மொபைலில் பார்த்தாலும் நன்றாக தெரிவது மாதிரி நீங்கள் வடிவமையுங்கள் (design) என்று கூகுளே சில வழிமுறைகளைக் கொடுக்கிறார்கள். அதே போல் கூகுளில் Google web masters tools என்ற ஒரு பகுதி இருக்கிறது. அதுவும் (free registration)இலவசமான பதிவுதான். அதில் பதிவு செய்துவிட்டோம் என்றால் கூகுள் தேடுதலுக்குள் (Google Search) நாம் எவ்வளவு விரைவில் வரவேண்டுமோ அவ்வளவு விரைவில் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. முதன் முதலில் இணையதளம் பதிவு செய்தபிறகு, Google web masters toolஎன்ற கூகுளின் இணையதளத்திற்குச் சென்று நம்முடைய இணையதளத்தை அவர்களுடன் பதிவுசெய்து கொள்ள வேண்டும். பதிவுசெய்த பிறகு கூகுள், உங்களது இணையதளம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா, யாராவது keyword-ஐ கூகுளில் தேடினார்கள் என்றால் உங்களது முகவரி ஏன் முதலில் வரவேண்டும், அதுவாக ஒரு முறையில் நிர்ணயம் செய்யப்பட்டு அது பத்தில் வரலாமா அல்லது பதினொன்றாவதில் வரவேண்டுமா என்பதை கூகுள் முடிவு செய்யும்.

கேள்வி: இணையம் வழியாக சந்தைப்படுத்தும் பெரிய வணிக இணையதளங்களான amazon, flipkort, e-bay இவைகள் எந்த அளவிற்கு சிறு மற்றும் குறுந்தொழிலுக்கு உதவி புரிகின்றன?

பதில்: முன்பு தொழில் தொடங்க என்னசெய்தார்கள் என்றால் ஒரு பெரிய வணிக இடத்தில் (commercial place) நிறுவனம் வைத்து, அதற்குண்டான விளம்பரம் செய்து செய்யவேண்டும். இப்பொழுது இந்த amazon, flipkort எல்லாம் என்ன செய்கிறார்கள் என்றால் ஏற்கனவே நீங்கள் நிறைய பொருட்கள் (products) வைத்திருந்தாலோ அல்லது வர்த்தகம் (trading) செய்தாலோ, ஒரு பொருளை உங்களால் சந்தையிலிருந்து வாங்கி இருப்பு வைத்துக்கொள்ள முடியும் என்றாலோ அதை விற்பதற்கு amazon, flipkart, snap deal போன்ற நிறுவனங்கள் மிக மிக பயனுள்ளதாக இருக்கிறது. இப்பொழுது அவர்களே என்ன செய்கிறார்கள் என்றால் சிறுதொழில் குறுந்தொழில் நிறுவனங்களுக்கெல்லாம் சென்று உங்களுடைய உறுப்பினர்கள் எல்லாரும் எங்களுடைய flipkart மூலமாக விற்பதற்கு ஒரு தளம் ஏற்படுத்தித் தருகிறோம். பணம் பெறுவது முதற்கொண்டு கொண்டு சேர்ப்பது வரை நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என்று சொல்கிறார்கள். amazon, flipkart எல்லாமே சில பொருட்களை அவர்களாகவே வாங்கி விற்றாலும் பெரும்பாலான பொருட்கள், சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் மூலமாக உருவாக்கியதுதான். உங்களுக்கு சில brand எல்லாம் இருக்கலாம், பெரிய brand ஆக இருந்து வாங்கி விற்பவர்கள் இருந்தாலும், சில சில அதாவது வீட்டு உபயோகப்பொருட்கள், அழகுப்பொருட்கள், பொம்மைகள் எல்லாமே சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களிடமிருந்து வாங்கி விற்கிற பொருளாக இருக்கிறது. சொந்த பொருளை சந்தைப்படுத்தும் அளவிற்கு இன்னும் யாரும் முயற்சி எடுக்கவில்லை. எல்லாருமே எல்லாருக்கும் தெரிந்த பொருளைத்தான் வாங்கப்போகிறோம். அதனால் வாங்கி விற்கக்கூடிய அளவிற்கு ஒரு நிலையை amazon, வணிகத்தளங்கள் கண்டிப்பாக ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

கேள்வி: விற்கும் பொருட்களுக்கு இணையம் வழியாக பணம் பெறுவது எப்படி?

பதில்: இதற்காக payment gate way service ஒன்றை பரிந்துரை செய்கிறார்கள் இந்தியாவில். உங்களுடைய பொருட்களை இந்தியாவிற்குள் விற்கவேண்டும் என்றால்Indian Payment gate way service provider என்று இருக்கிறார்கள். அவர்கள் மூலமாக நீங்கள் விபனை செய்தீர்கள் என்றால் அவர்கள் பங்கு கேட்பார்கள். உங்களுடைய பொருட்களை எப்படி இணையத்தின் மூலமாக விற்கலாம், அதற்கான வங்கி விதிமுறைகள் இருக்கிறது அதை எல்லாவற்றையும் பூர்த்தி செய்யச் சொல்வார்கள். அதன் பிறகு உங்களுக்கு ஒரு இணையக் கணக்கு(Internet Account) கொடுப்பார்கள். வங்கி கணக்குத் தவிர வணிகக்கனக்கு என்று ஒன்று கொடுப்பார்கள். அந்த வணிகக்கனக்கு மூலமாக என்னென்ன பொருட்களை அந்த payment gate way provider மூலமாக விற்கப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் உங்களது வங்கிக் கணக்கு மாதிரியே பார்த்துக்கொண்டே வரலாம். அதன்பிறகு தினசரியோ அல்லது மாதாந்திரமோ உங்கள் வங்கிக் கணக்கிற்கு உங்களுக்கு உண்டான பணம் வந்துவிடும். payment gate way service பங்கு கொடுக்க விருப்பமில்லை என்று சிலர் சொல்வார்கள். சிலநபர்களைப் பார்த்தீர்கள் என்றால் கூட்டம் நடத்துகிறார்கள், இதனுடைய பதிவு ஐநூறு ரூபாயாக இருக்கலாம், ஆயிரம் ரூபாயாக இருக்கலாம், அதற்கு உண்டான பங்கு போய்விட்டது என்றால் லாபம் கிடையாது. கூட்டங்கள் அல்லது வணிக நோக்குடன் நடத்துவது கிடையாது. நிறைய நபர்கள் அதை தெரிந்துகொள்ளவேண்டும் என்று நடத்துகிறார்கள்.

kandasaami nerkaanal7அப்படிப்பட்ட நிறுவனங்கள் என்னசெய்யலாம் நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிடுங்கள், அனுப்பினாலே போதும் உங்களது பொருளை நாங்கள் கூரியர் மூலமாக அனுப்பிவிடுகிறோம். யார் தயவும் இல்லாமல் ஒரு Payment gateway service எதுவும் இல்லாமல் நேரடியாக நீங்களாக விற்கலாம். இன்றைக்கு பணம் கொடுத்தீர்கள் என்றால் நாளைக்கே வங்கி கணக்கில் வரவேண்டிய வசதி இருக்கிறது. அதனால் நீங்கள் உங்களது இணையதளத்தில் நீங்கள் உங்களது வங்கிக்கணக்கின் விவரத்தைக் கொடுத்துவிட்டீர்கள் என்றால் இந்த வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்பிவிடுங்கள் இந்த பொருள் வேண்டும் என்று விவரத்தை சுட்டிக்காட்டி பணத்தை அனுப்பிவைத்தீர்கள் என்றால் அதன்பிறகு நீங்களாக கூரியரில் உங்களது பொருளை அனுப்பி வைத்துவிடலாம். எப்பொழுது Payment gateway service provider தேவையென்றால் உடனடியாக பணத்தை பெற்று உடனடியாக சேவை தரவேண்டும், பயணச்சீட்டு பதிவு செய்ய வேண்டும் என்பது போன்ற நிலையில்தான் இந்த Payment gateway service provider தேவைப்படுகிறதே தவிர மற்ற நேரங்களில் நீங்கள் நேரடியாக எங்களது வங்கிக் கணக்கிலே பணம் அனுப்பிவைத்துவிடுங்கள், அதன் பிறகு சேவையைத் தர வேண்டுமோ அல்லது என்ன பொருட்களை அனுப்பி வைக்கவேண்டுமோ அதை அனுப்பி வைத்துவிடலாம்.

கேள்வி: சிறு மற்றும் குறுந்தொழிலுக்கு அந்நியச் செலாவணி மூலமாகவும் அல்லது இந்திய ரூபாயிலும் பொருட்களைச் சந்தைப்படுத்தமுடியுமா?

பதில்: கண்டிப்பாக முடியும். படம் வரையும் ஓவியராக இருக்கலாம் அல்லது கட்டுமானப் பொறியாளராக இருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் ஒரு துறையில் நிபுணராக இருக்கலாம். இம்மாதிரி தனித்திறமை உள்ளவர்கள் இணையம் மூலமாக சேவை(service) பண்ணலாம். இப்பொழுது நிறைய நபர்கள் ஆங்கிலம், கணிதம் என்று கற்பிக்கிறார்கள். இந்த மாதிரி செய்பவர்கள் வெளிநாட்டில் பணம் ஈட்டுவதில் நிறைய வழி இருக்கிறது. வெளிநாட்டில் பணம் வாங்குவதற்கு paypal என்ற நிறுவனம் இருக்கிறது. அது மூலமாக அவர்கள் பதிவு பண்ணிக்கொண்டார்கள் என்றால் இவர்களுக்கு ஐந்து சதவிகிதம் பங்கு போனபிறகு வங்கிக் கணக்கில் பணம் வந்துவிடும். அதே மாதிரி இந்தியாவிலிருந்து பணம் ஒருவரிடம் இருந்து வாங்கவேண்டும் என்றால் மிக எளியமுறை வசதிகள் இந்த paypal மூலமாக சாத்தியம்.

கேள்வி: எந்த மாதிரி பொருட்கள் இணையம் வழியாக பெரும்பாலும் விற்கப்படுகிறது?

பதில்: அன்றாடம் நாம் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் மற்றும் அலைபேசிகள், மின்னணு பொருட்கள். அது இல்லாமல் இணையம் மூலமாக பொருளை மட்டும் விற்கமுடிவது மட்டுமல்லாமல் படம் வரைந்து இணையம் மூலமாக நிறைய நபர்கள் விற்கிறார்கள் அல்லது மென் திறன் பயிற்சியாளர் இருக்கலாம், நிறைய videos எடுத்து பண்ணலாம். அவ்வாறு எடுத்த videosஐ விற்கிறார்கள். படம் வரைந்து விற்கிறார்கள். இணையதளம் எப்படி அமைத்துக்கொடுப்பது என்பதை இணையம் மூலமாகவே விற்கிறார்கள், அதன் பிறகு அதிகமாக மக்கள் தேடிப்போவது சமையல் குறிப்பு. இந்த சமையல் குறிப்பு சார்ந்த இணையதளத்திலும் வாய்ப்பு இருக்கிறது. அதே மாதிரி இவை மட்டும் இல்லாமல் நிபுணத்துவ சேவைகளையும் இணையம் மூலம் கண்டிப்பாக விற்க இயலும். சில எழுத்தாளர்கள் இருக்கலாம், ஆங்கிலத்திலிருந்து இந்தி மொழிபெயர்ப்பவர்களாக இருக்கலாம் இந்த மாதிரி சேவைக்கு ஏராளமான வாய்ப்புகள் இணையம் மூலமாக இருக்கிறது.


சிறகு நிருபர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இணைய வணிக நிபுணர் கந்தசாமி அவர்களின் நேர்காணல்”

அதிகம் படித்தது