மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இரத்தம் கொதிப்பதற்கு முன் இறக்கிவிட வேண்டும்

சித்த மருத்துவர் ஜெரோம் சேவியர் B.S.M.S, M.D

Feb 27, 2016

Dr.Jerome -FIKaplan’s clinical hypertension என்றொரு புத்தகம். நவீன மருத்துவத்தில் இரத்தக் கொதிப்பு பற்றி எழுதப்பட்ட ஒரு முழுமையான புத்தகம் என இதை கூறமுடியும்.

இந்த நூல் இரத்தக் கொதிப்பு ஏன் ஏற்படுகிறது என்று விளக்கும்போது, “பல கோடி டாலர்கள் செலவு செய்தும், இன்னும் இரத்தக் கொதிப்பு ஏன் ஏற்படுகிறது என்பதற்கான முழுமையான காரணத்தை புரிந்து கொள்ள முடியவில்லை” என்கிறது.

Blood pressure measuring studio shotஇது உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். ஏன் நவீன மருத்துவத்தில் இதற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை?

ஏனென்றால் எந்த ஒரு நோய்க்கும் ஒரு கிருமியோ அல்லது ஏதேனும் வேதிப்பொருளோ காரணமாக இருக்க வேண்டும் என்று நுண்ணோக்கியின் மூலமோ அல்லது மருத்துவ ஆய்வகத்திலோ (Medical Laboratory) பகுத்துப் பார்க்கும் போக்கு உடையது நவீன மருத்துவம்.

kothikkummun2ஆனால் உடலில் இவை மட்டுமல்லாது கண்ணுக்குத் தெரியாத வாயுக்கள், வெப்பம், குளிர்ச்சி போன்றவையும் செயல்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. இவற்றை நுண்ணோக்கி கொண்டோ ஆய்வகத்திலோ பரிசோதித்து கணக்கிட முடியாது. இவற்றையே வாதம், பித்தம், கபம் என்று சித்த மருத்துவம் விளக்குகிறது.

இங்கு நான் விளக்குகின்ற இரத்தக் கொதிப்பு அல்லது அதி இரத்த அழுத்தம் என்பது ஒரு பித்த நோய்.

உடலை சாரம்(திசுக்களின் திரவப்பகுதி), இரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, சுக்கில சுரோணிதம்(ஆண்களுக்கு விந்து, பெண்களுக்கு அண்டம்) என ஏழு தாதுக்களாக சித்த மருத்துவ இயங்கியல் (Siddha Physiology) பிரிக்கிறது.

இதில் இரத்தம் எனும் தாதுவில் பித்தத்தின் செயல்பாடு அதிகரிப்பதால் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.

இதுதான் இரத்தக் கொதிப்புக்கு சித்த மருத்துவம் கொடுக்கும் நோய்நாடல் விளக்கம். எனவேதான் சித்த மருத்துவம் இரத்த கொதிப்பு நோயை ‘இரத்த பித்தம்’ என அழைக்கிறது. எனவே பித்தத்தை சரிசெய்வதன் மூலம் இரத்த அழுத்தத்தை சரிசெய்ய முடியும்.

இரத்த கொதிப்பு என்றால் என்ன?

நல்ல உடல் நிலையில் உள்ள ஒருவருக்கு இரத்த அழுத்தம் 120/80mmHg என இருக்க வேண்டும்.

இது 130-139/85-89mm Hg என இருப்பது சற்று உயர் இரத்த அழுத்தம் ஆனாலும் இதனால் பாதிப்பு இல்லாதவரை இதையும் சரியான அளவு என்றே எடுத்துக் கொள்ளலாம்.

இது 140-159/90-99mm Hg என்று இருந்தால் முதல் நிலை இரத்தக் கொதிப்பு (mm Hg) (Mild).

இது 160-179/100-109/ mm Hg என இருப்பது இரண்டாம் நிலை இரத்தக் கொதிப்பு(Moderate).

இது ≥180 /≥110mm Hg இருப்பது மூன்றாம் நிலை இரத்தக் கொதிப்பு (Severe).

இரத்தக் கொதிப்பு ஏன் வருகிறது:

  1. உணவு
  2. மனம்
  3. செயல்

ஆகிய மூன்றில் ஏற்படும் தவறுகள் காரணமாக இரத்தத்தில் பித்தத்தின் அளவு அதிகரித்து இந்நோய் ஏற்படுகிறது.

உணவில், உப்பு, புளி, காரம் ஆகிய மூன்று சுவைகளை அதிகமாக உண்டுவருவது,

மனதின் அமைதியை கெடுக்கும் வகையிலான சூழ்நிலையில் பிணைபட்டு இருப்பது,

உடலில் பித்தத்தை அதிகரிக்கும் விதமான செயல்களை செய்து வருவது.

புகைப்பிடிப்பது:

images-20

இரத்தக் கொதிப்பு உருவாவதற்கு மிக முக்கியமான காரணியாக புகைப்பிடிக்கும் பழக்கும் உள்ளது.

  • அதிக கொழுப்புள்ள உணவு

kothikkummun1

பால், நெய், தயிர், வெண்ணெய் போன்ற பால் பொருட்களும், இறைச்சியின் கொழுப்பு மற்றும் எண்ணெய் பொருட்களில் கொழுப்பு அதிகமாக உள்ளது. இவையும் இரத்தக் கொதிப்பிற்கு காரணிகளாக உள்ளன.

மருத்துவம்:

இரத்தக் கொதிப்பு திடீரென ஓரிரு நாளில் வந்துவிடுகின்ற நோயல்ல, பெரும்பாலானோருக்கு இரத்த அழுத்தம் அதிகரிக்க ஆரம்பித்ததே தெரியாத அளவுக்கு மிகவும் மெதுவாக துவங்கும்.

இதற்கு உடலில் இயங்கும் சக்திகளான வாதம், பித்தம், கபம் போன்றவற்றை சரியான அளவில் வைத்துக்கொள்வது அவசியம். இதற்கு பின்வரும் சிகிச்சைகளை அவற்றிக்குரிய காலக்கெடுவின்படி செய்து வருவது அவசியம்.

நசியம் – நாசியில் மருந்து இடுவது

வமனம் – வாந்தி செய்வித்தல்

பேதி – பேதி செய்வித்தல்

மேலே கூறிய மூன்றையும் சித்த மருத்துவரின் ஆலோசனையில் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்து வருவது அவசியம்.

இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள்:

  1. முறையான உள் மருந்துகள்
  2. யோகாசனம்

போன்றவற்றை முறையாக எடுத்து வந்தால் இரத்தக் கொதிப்பை முற்றிலும் சரிசெய்ய முடியும்.

மருதம்பட்டை

முசுமுசுக்கை

நெல்லிக்காய்

சீரகம்

வெண்தாமரை

கரிசாலை

போன்ற மூலிகைகள் சேர்ந்த மருந்துகளும்,

சிருங்கி பற்பம்

அயச் செந்தூரம்

நாக வங்கம்

சிலாசத்து

பவளம்

சேர்ந்த மருந்துகளும் முறையான நோய் கணிப்பு மற்றும் தேக கணிப்புடன் கொடுக்கப்பட்டால் நல்ல பலனைத் தரும்.

இரத்தக் கொதிப்பிற்கான யோகாசனங்கள்:

              thandaasanam

        தண்டாசனம்

Vajraasanam

        வஜ்ராசனம்

pujangaasanam

            புஜங்காசனம்

sethubandha sangasanam

  சேதுபந்த சர்வாங்கசனம்

savaasanam

            சவாசனம்

danuraashnam

         தனுராசனம்

ஒரு அறிமுகத்திற்காகத்தான் இவற்றின் பெயர்களைக் குறிப்பிட்டேன். ஆனால் ஆசனங்களை சுயமாக செய்ய முயற்சிக்கக் கூடாது.

B.S.M.S அல்லது B.N.Y.S படித்த மருத்துவரிடம் சென்று முறையாக கற்று செய்வதே நல்லது.

பின் குறிப்பு:

சிறுநீரக நோய்கள், நொதி (Hormone) பிரச்சனைகள் போன்ற வேறு சில நோய்களின் காரணமாக இரத்த அழுத்தம் ஏற்படலாம். இவைகளுக்கு அந்த நோய்களுக்கான சிகிச்சையின் மூலம் நோயை அணுக வேண்டும்.

மருத்துவ ஆலோசனைக்கு:

Dr.Jerome -FI

Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D

சித்தமருத்துவ மையம்,

டாக்டர்ஸ் பிளாசா,

சரவணா ஸ்டோர் எதிரில்,

வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,

வேளச்சேரி, சென்னை.

அலைபேசி எண்: 9444317293

இணையதள முகவரி:www.doctorjerome.com

மின்னஞ்சல் முகவரி :drjeromexavier@gmail.com

முகநூல் முகவரி: https://www.facebook.com/jerome.xavier.5209?fref=ts


சித்த மருத்துவர் ஜெரோம் சேவியர் B.S.M.S, M.D

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இரத்தம் கொதிப்பதற்கு முன் இறக்கிவிட வேண்டும்”

அதிகம் படித்தது