மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இளநரையைப் போக்க வழிமுறைகள்

சிறகு நிருபர்

Dec 12, 2015

ilanarai1

 1. முசுமுசுக்கை இலையின் சாறு மற்றும் நல்லெண்ணெயை சம அளவு சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு, வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநரை மாறும்.
 2. அன்றாடம் உண்ணும் உணவில் கறிவேப்பிலையை சேர்த்து வந்தால் இளநரை மறையும்.
 3. இளநரையை மாற்றும் சக்தி பசுவெண்ணெய்க்கு உண்டு. அதனால் இதனுடன்கறிவேப்பிலைப் பொடியை சேர்த்து சாப்பிட இளநரை மறையும்.
 4. தண்ணீரில் உலர்ந்த நெல்லிக்காயை இரவு ஊறவைத்து, அந்தத்தண்ணீரை தலையில் தேய்த்து குளித்து வந்தால் இளநரை மாறும்.
 5. தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலையை அரைத்து, காய்ச்சி தினமும்தேய்த்து வர இளநரை மறையும்.
 6. தினமும் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை நன்றாக அரைத்து ஒரு கவளம் சாப்பிட்டு வந்தால் ஒரு மாதத்தில் இளநரையைப் போக்கலாம்.
 7. நரைமுடி கருப்பாக மாற முளைக்கீரை உதவும். எனவே முளைக்கீரையை அடிக்கடிசாப்பிடுங்கள்.
 8. ஆலமரத்தின் கொழுந்து மற்றும் வேர், செம்பருத்தி பூ ஆகியவற்றை பொடிசெய்து, தேங்காய் எண்ணையில் காய்ச்சி தேய்த்துவர நரைமுடி கருப்பாக மாறும்.
 9. பாலில் துருவிய இஞ்சியை சேர்த்து நரை முடியின் மீது தடவி, சில நிமிடங்கள் ஊற வைத்து குளித்தால், நரைமுடி பிரச்னையிலிருந்து விடுபடலாம்.
 10. செம்பருத்தியின் இலை மற்றும் பூவை அரைத்து, அதனை தலையில் தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து குளித்து வந்தால் நரைமுடி மறையஆரம்பிக்கும், இதனை வாரத்துக்கு ஒரு முறை செய்ய வேண்டும்.
 11. வெங்காயச்சாற்றை தலையில் தடவி ஊறவைத்து குளித்தால், முடியானது அதன் இயற்கை நிறத்தைப் பெறும்.
 12. அன்றாடம் நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தாலோ அல்லது நெல்லிக்காய் எண்ணெயை தலைக்கு தடவி வந்தாலோ, நரைமுடியில் இருந்து விடுதலை பெறலாம்.
 13. மருதாணி, கறிவேப்பிலை, நெல்லிக்காய் போன்றவற்றை சேர்த்து காய்ச்சிய எண்ணெயை தலைமுடிக்கு பயன்படுத்துவது மிக மிக நல்லது. இதைத் தொடர்ந்துபயன்படுத்தினால் இளநரை மறையும்.
 14. கடுக்காய் ஊறிய தண்ணீரையும், கரிசிலாங்கண்ணி சாற்றையும் கலந்து தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊறியதும் குளித்து வந்தால் இளநரை பிரச்சனைக்கு நல்ல பலன் கிடைக்கும்.


சிறகு நிருபர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இளநரையைப் போக்க வழிமுறைகள்”

அதிகம் படித்தது