மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உரிமைப் போராட்டம் (கவிதை)

ராஜ் குணநாயகம்

May 7, 2022

siragu urimaip poraattam1

நீங்கள்

உண்பதற்கு வழியில்லாமல்

“வன்முறை” வழியில் போராடும்போதும்

அது

உரிமைக்கான போராட்டமாக மெய்ப்பிக்கப்படுகிறது…

நாங்கள்

உயிர்வாழ்வதற்கான உரிமை கேட்டு

எங்கள்

இருப்பிற்காக போராடியபோது

அது மட்டும் எவ்வாறு?

உங்களுக்கு

“பயங்கரவாதம்” ஆனதோ?

நிற்க!

தோழர்களே!

ஆனாலும்

உங்கள் வலிகள்

எங்களுக்கும் வலிக்கிறது

உங்கள் உணர்வுகளை

எங்கள் இதயங்கள்

இறுக்க அணைத்துக்கொள்கிறது.

நாங்கள் உங்களுக்கோ

நீங்கள் எங்களுக்கோ

எதிரிகளல்ல

நம் “பொது எதிரி”

இனவாத அரசுகளும்

எல்லா வகையான இனவாதிகளும்தான்.

இலங்கை மாதாவின் கண்ணீர்

நிச்சயம்

நம் இருதயங்களை உடைக்கும்.

 

ஈழன்


ராஜ் குணநாயகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உரிமைப் போராட்டம் (கவிதை)”

அதிகம் படித்தது