எனது நண்பன் ஒரு பத்திரிகைக்காரன் (கவிதை)
இல. பிரகாசம்Mar 25, 2023
காகிதத்தில் கிறுக்கிக் கிறுக்கி
கோணல்மானலாய்க் கோடுகளைப் போட்டுக் கொண்டிருந்தான்.
வட்டமாக இரண்டு கிறுக்கல்கள்
அவற்றிற்கு மேலே இரண்டு வில்போன்ற வளைகோடுகள்
இப்போது வட்டக் கிறுக்கல்களுக்குள்
இரண்டு சிறிய உருண்டையை கருப்பாய்த் தீட்டினான்
அதற்குக் கீழே
நீளவாக்கில் மெல்லிய ஒரு கோடு
மீண்டும் தன் அருகில் இருந்த
ஷார்ப்பனரை எடுத்தான் திருகினான்
கூராயிருந்தது
திறந்த நிலையில் அந்த வாயை வரைந்தான்
அந்தக் கார்ட்டூன்
ஒரு பத்திரிகைக்காரனைப் போல இருந்தது.
எனது நண்பன் ஒரு பத்திரிகைக்காரன் என்பதும் வாஸ்தவம் தான்.
இல. பிரகாசம்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “எனது நண்பன் ஒரு பத்திரிகைக்காரன் (கவிதை)”