மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஐங்குறுநூறு 102, நெய்தல் திணை

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Mar 4, 2023
siragu aingurunuru1
ஐங்குறுநூறு 102,  அம்மூவனார்நெய்தல் திணை – தோழி செவிலித்தாயிடம் சொன்னது


அன்னை வாழி! வேண்டு அன்னை! நம் ஊர்
நீல் நிறப் பெருங்கடல் புள்ளின் ஆனாது,
துன்புறு துயரம் நீங்க,
இன்புற இசைக்கும், அவர் தேர் மணிக் குரலே.
 
எளிமை நடையில்…

 
தலைவியின் துன்பம் தோய்ந்த 
கண்கள் கண்டு தாய்
துயருற்றனள்
 
துருதுருவென ஆடிப் பாடிய
மகிழ்ச்சி கண்கள் துயரத்தில்
மூழ்கியிருக்கும் காரணம்
அறியாது தவித்தனள் 
 
தோழியிடம் தன் தவிப்பைக்
கூற தோழியோ அவள் 
மகளின் துயரம் போக
வழி ஒன்று உள்ளது
என்றனள்
 
அலை அலையாய்
பாடி வரும் கடலின்
மேற்பரப்பைத் தொட்டுப்
பறந்து செல்லும்
கடல் பறவையின்
இனிமையான கூவல்கள்
போலத் தலைவனின்
தேர் எழுப்பும்
இன்னிசை ஒலியைக்
கேட்பின்
தலைவியின் 
துயரம் மறையும்
என்றே
தலைவியின் காதலைத்
தாய்க்கு இரகசியமாய்
உரைத்தனள் 

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஐங்குறுநூறு 102, நெய்தல் திணை”

அதிகம் படித்தது