ஐங்குறுநூறு 113, நெய்தல் திணை
வழக்கறிஞர். ம. வீ. கனிமொழிMar 18, 2023
ஐங்குறுநூறு 113, அம்மூவனார், நெ
அம்ம வாழி தோழி! நென்னல்
ஓங்கு திரை வெண்மணல் உடைக்கும் துறைவற்கு
ஊரார் பெண்டென மொழிய, என்னை
அது கேட்ட ‘அன்னாய்’ என்றனள் அன்னை,
பைபய ‘எம்மை’ என்றனென் யானே.
தோழியே கேளடி
நான் மையல் கொண்ட
கதையைக் கேளடி
கடற்கரை
மணலில் நடந்த
பாதச் சுவடுகள்
எங்கள் எழிலான
காதல் இயம்புமடி
அலைகளின் தொடுதல்
வெண்மை மண்தனை
உடைத்துச் சிதறடிக்குதடி
அது போலவே
எங்கள் இன்பக் காதல்
ஒழுக்கத்தினை
புறம் பேசும்
நாக்குகள்
சிதறடித்தனவே துன்பமடி
இதைக் கேட்ட
தாயவளும் காதல்
உண்மையோ என வினவ
ஆம் என்றே
தலையாட்டினேன் நானடி
காதலை வென்றே
அன்பு நிறைந்தே
வாழ்ந்திடுவோம்
நாமடி
வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஐங்குறுநூறு 113, நெய்தல் திணை”