மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஐங்குறுநூறு 23, ஓரம்போகியார், மருதத் திணை

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Dec 17, 2022
siragu aingurunuru1

ஐங்குறுநூறு 21- 30 வரை, களவன் பத்து என அறியப்படும்.  களவன் என்றால் நண்டு.
முள்ளி வேர் அளைக் களவன் ஆட்டி,
பூக் குற்று, எய்திய புனல் அணி ஊரன்
தேற்றம் செய்து நப்புணர்ந்து, இனித்
தாக்கு அணங்கு ஆவது எவன்கொல்? அன்னாய்!
பல பல கதைகள்
சொன்னானடி தோழி
பல பல கனவுகள்
தந்தானடி தோழி
எத்தனையோ உறுதி மொழி
எத்தனையோ அன்பு மொழி
கூறியே என்னோடு
கூடினானடி தோழி
கள்வனவன்
சொற்களை நம்பியே
களைத்துப் போனேனடி தோழி
முள்ளிச் செடிக்குள்
புகுந்து விளையாடும்
நண்டுகளும்
புனலாடும் வெள்ளி ஆற்றில்
நீந்தி ஆடும்
மங்கையரும் கொண்ட
ஊரனவன் பொய்யுரைத்து
விளையாடி மறைந்தானாடி
தோழி
துன்பம் தந்து
மறந்து பறந்தானடி தோழி
தவித்தே துவள்கிறேனடி தோழி

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஐங்குறுநூறு 23, ஓரம்போகியார், மருதத் திணை”

அதிகம் படித்தது