மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஐங்குறுநூறு 55

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Jan 14, 2023
siragu aingurunuru
ஓரம்போகியார்மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
கரும்பின் எந்திரம் களிற்று எதிர் பிளிற்றும்
தேர் வண் கோமான் தேனூர் அன்ன இவள்
நல் அணி நயந்து நீ துறத்தலின்,
பல்லோர் அறியப் பசந்தன்று நுதலே.
களிற்றின் பிளிறலுக்கு
எதிர் பிளிறல் செய்திடும்
கரும்பு எந்திரம் இருப்பிடமாம்
தேர்களை ஈந்திடும்
அரசனின் ஊரதுவாம் தேனூர்

தேனூரைப் போலவே

தகித்திடும் அழகவளே
தெம்மாங்கு பாடிடும்
இளங்குயில் அவளே
தலைவியின் கீதம்
மறுத்து பரத்தை மடி
சாய்ந்தவன் நீயே
பொற்கொடி அவளின்
நெற்றி கண்டது
பசலை உன்னாலே
கற்பொழுக்கம் மீறி
சென்றனை இன்று
தலைவியின்
வாசல் வந்தனை
உன்னால் பெற்ற
துன்பம் போதும்
மீண்டும் வேண்டாம் துயரம்
மீண்டு வராதே தலைவியிடம்
அவளின் தலைவாசல் இனி
உன்னை ஏற்காதே

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஐங்குறுநூறு 55”

அதிகம் படித்தது