மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஐங்குறுநூறு 75 மருதத் திணை

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Feb 18, 2023
siragu aingurunuru1
ஐங்குறுநூறு 75, ஓரம்போகியார்மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது


பலர் இவண் ஒவ்வாய் மகிழ்ந, அதனால்
அலர் தொடங்கின்றால் ஊரே, மலர
தொன்னிலை மருதத்துப் பெருந்துறை
நின்னோடு ஆடினள் தண் புனல் அதுவே.

 
தலைவியை மறந்து
மருத மர 
நிழலின் கீழ் அசைந்தோடும்
குளிர்
நீரில் இன்னிசையாய்
தென்றல் வீசிடப் பரத்தையுடன்
குளித்து மகிழ்ந்தாயோ? 
எனத் தோழி கோபத்துடன்
தலைவனை வினவ
அவனோ மறுத்தனன்
 
ஊரில் உள்ள ஒவ்வொரு
வீடும் திண்ணையும்
தூணும் துரும்பும்
நின் ஆட்டத்தைக்
கண்டே புறம் பேசுகின்றனர்
நீயோ ஒத்துக் கொள்ள
மறுக்கின்றாய்
 
இனி
எழில் கூந்தல்
கொண்ட தலைவியைக் 
காண ஒருபோதும்
வாராதே என்று
தோழி சீற்றத்துடன்
உரைத்துச் சென்றனள்
 
 
 

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஐங்குறுநூறு 75 மருதத் திணை”

அதிகம் படித்தது