சூலை 2, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

கவிதைத் தொகுப்பு (அறுவடை, வரலாற்றுத்தவறு!)

ராஜ் குணநாயகம்

Apr 2, 2022

அறுவடை

siragu aruvadaiஅறுவடை

சரியாய்தான் நடைபெறுகிறது.

விதைத்தது

தானே விளைகிறது

விதைத்ததுதானே

விளையும்.

தமிழர் வம்சத்தை அடியோடு

அழிக்க நினைத்து

முழு நாட்டையுமே

அழித்து நிற்கும்

“மகாவம்ச” சிந்தனை!

 

வரலாற்றுத்தவறு!

uyir thotram1வரலாற்றுத்தவறு!

ஒவ்வொரு

மனிதக்குழுமங்களும்

இதுவரை….

தாம் அறிந்தவற்றை

மட்டும் வைத்துக்கொண்டு

தம்மறிவுக்கெட்டிய

தூரத்திற்குள்;

காலத்திற்குள்

தங்கள் தங்கள்

தனித்துவத்தை நிலைநிறுத்திட

வரலாற்றின்

தொடக்கப்புள்ளியையும்

முடிவுப்புள்ளியையும்

தமக்குச்சார்பான வழித்தடத்தில்

முன்னோக்கியும்

பின்னோக்கியும்

நகர்த்திச்செல்லவே முயன்றுகொண்டிருக்கின்றன.

இவ்விடத்தில்

பொய்கள் உண்மையாக்கப்படலாம்;

உண்மைகள் பொய்யாக்கப்படலாம்;

வரலாற்றுத்தடயங்கள் அழிக்கப்படலாம்,

புதிதாய் உருவாக்கப்பட்டு

பழமையானதாய் காட்டப்படலாம்;

தெரியாதவையோ

ஏராளமாய் இருக்கலாம்!

கூடவே

சமரசம் காணமுடியாத

முரண்பாடுகளுக்கான

வழித்தடங்களும் வெட்டப்படுகின்றன.

உலகமோ

பல மில்லியன் ஆண்டுகள்

பழமையானது!

இந்த உலகம்

எப்போது உருவானது என்றோ

எப்போது அழியும் என்றோ

சரியாய் தெரிந்தவர் என்று

இதுவரை

யாருமில்லை!

 

ஈழன்.

 


ராஜ் குணநாயகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கவிதைத் தொகுப்பு (அறுவடை, வரலாற்றுத்தவறு!)”

அதிகம் படித்தது