சூலை 2, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

கவிதைத் தொகுப்பு (தேய்பிறை, வானவில், பாய்மரப் படகு)

குமரகுரு அன்பு

Mar 19, 2022

siragu theipirai

தேய்ந்து கொண்டேயிருக்கும் நிலாவொரு

ஆச்சர்யத்தின் ஸ்மைலியிலிருந்து

மென்சிரிப்பு ஸ்மைலியாகி

மெல்ல கரைந்து

வாய் மூடிப் போகிறதே!

*****

siragu rainbow

வானவில்லின் இரு முனையிலும்

இரு சிறுவர்கள்

ஒருவன் குனிந்தபடி

குளத்தில் வாரவில்லின்

பிம்பத்தைப் பார்க்கிறான்

இன்னொருவன் உயரமான கண்ணாடி

கட்டடத்தில் வானவில்லின்

பிம்பத்தைப் பார்க்கிறான்

வானவில் மேகத்திலிருந்து

சோகமாய் இருக்கிறது

பிள்ளைகளால் கைவிடப்பட்ட

திண்ணைக் கிழவியின்

அழுகையுடன்!!

 

******

siragu padagu

கடலோரம் நிற்கும் பாய்மரப் படகுகளின்

மேல் அமர்ந்திருக்கும்

காக்கைகள்…

அவற்றின் துடுப்புகளைக் காற்றில்

அலைய விடுகின்றன…

*****

siragu fish2துள்ளத்துள்ள

வலையிலிருந்து தெறிக்கும்

மீனின் மேலிருக்கும்

கடல் நீர்த்துளிகளை

எதற்காக சுமந்து வந்ததோ?


குமரகுரு அன்பு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கவிதைத் தொகுப்பு (தேய்பிறை, வானவில், பாய்மரப் படகு)”

அதிகம் படித்தது