காற்று! (கவிதை)
ராஜ் குணநாயகம்Feb 4, 2023
காற்று!
காற்று
எங்குதான் தொடங்கிற்று?
சரி,
எங்குதான் தொடங்குகிறது
எங்குதான் முடிகிறது?
அள்ளமுடியவில்லை
அளவிட முடியவில்லை
அளவில் குறைந்ததாயுமில்லை
தொடக்கமில்லை
முடிவுமில்லை.
காற்று!
அற்று
மனிதரில் உயிரில்லை.
இப்பேரண்டத்தின்
தெய்வீக ஊற்று
நீ
அதைப்போற்று.
ஈழன்.
ராஜ் குணநாயகம்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “காற்று! (கவிதை)”