காலமே பதில் சொல்லும்! (கவிதை)
ராஜ் குணநாயகம்Jan 23, 2021
உடைத்துக்கொண்டேயிருங்கள்
நாங்கள் கட்டிக்கொண்டேயிருப்போம்
எரித்துக்கொண்டேயிருங்கள்
நாங்கள் பீனிக்ஸாய் எழுந்துகொண்டேயிருப்போம்
அழித்துக்கொண்டேயிருங்கள்
நாங்கள் உயிர்த்துக்கொண்டேயிருப்போம்
எங்கள் உரிமைகள், சுதந்திரங்கள்
அடக்கி ஒடுக்கப்படும்போதெல்லாம்
நாங்கள் அடங்காது போராடிக்கொண்டேயிருப்போம்
அடங்காது எங்கள் இனம்
அடங்காது மனித இனம்
பேரினவாதமே!
நினைவில் வைத்துக்கொள்
நினைவுத்தூபிகளை அழித்திவிடலாம்
நினைவுகளை அல்ல
எங்களை
அவமானப்படுத்துவதாய் நினைத்து
நீயே அவமானப்பட்டுக்கொண்டிருக்கிறாய்- மனிதர்களாய்
எங்கள் இனத்தையே
அழிப்பதாய் நினைத்து
இந்த தேசத்தையே-எங்கள் தேசத்தையே
அழித்துக்கொண்டிருக்கிறாய்
பொறுத்திருப்போம்
காலமே பதில் சொல்லும்!
ஈழன்.
ராஜ் குணநாயகம்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “காலமே பதில் சொல்லும்! (கவிதை)”