மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கிளிக்கூண்டும் அரசியலும் (கவிதை)

இல. பிரகாசம்

Apr 14, 2018

siragu kilikkoondum1

 

கிளிக்கூண்டும் அரசியலும்

எத்தனைக் காலமடி இத்துயரம் -பின்னும்

இத்துயரம் நம்மைப்பின் தொடரவோ?

கூண்டில் அடைபட்ட சுகம்தான் -இன்னும்

கண்ணுக்கு ஒளியைத் தருவதோ?

வீதிவரை வந்ததடி துன்பம் -பின்னும்

வீடுவரை வாராது போகுமோ?

 

நின்சிறகு அசையாது போயின் -பின்னே

நீகாணும் உலகம்கை வருமோ?

சிறகிலும் உனக்குத் தெம்புண்டு -இன்னும்

சிறையில் வாசம் ஏனடியோ?

எதிரில் விரிந்த வானமுண்டு -பின்னும்

எதற்கு இத்தனைத் தயக்கம்?

 

கருத்துண்டு உனக்கென்று ஒன்று -இன்னும்

குரல்தான் காணலியே பேதையே!

உலகம் உனதடி பேதையே -பின்னும்

உறக்கம் தானோ உனக்கு?

கீழ்நோக்கும் பார்வை ஏதுக்கடி -பின்னும்

கீழே செல்லத்தான் நோக்கமோ?

(பெண்கள் அரசியலில் ஈடுபடுவது தேவை என்பதை வலியுறுத்தி)

 


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கிளிக்கூண்டும் அரசியலும் (கவிதை)”

அதிகம் படித்தது