சாகாவரம் பெற்றவனோ! (கவிதை)
ராஜ் குணநாயகம்Mar 11, 2023
அந்த மாவீரன்
இருக்கும்போதே
பலமுறை கொல்லப்பட்டான்
அவன் இல்லாதபோது
பலமுறை உயிர்ப்பிக்கப்படுகிறான்!
இயேசுநாதர்
இறந்தே மூன்றாம் நாளில்
உயிர்தெழுந்தார் என்கிறது
புனித விவிலியம்.
இவன் மட்டுமோ
பலமுறை கொல்லவும்படுகிறான்
பலமுறை உயிர்ப்பிக்கவும்படுகிறான்!
மீடபர்கள்
உலகில் அவதரிப்பது அரிதல்லவோ;
புத்தர் வந்தார்
இயேசு வந்தார்
முகமது நபி வந்தார்
மகாத்மா காந்தி வந்தார்.
கடவுள்
உண்டு என்பவர்களும்
இல்லை என்பவர்களும்
இங்கு உண்டு.
இவன் சாகாவரம் பெற்றவனோ?
-ஈழன்
ராஜ் குணநாயகம்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “சாகாவரம் பெற்றவனோ! (கவிதை)”