செப்டம்பர் 23, 2017 இதழ்
தமிழ் வார இதழ்

சொரியாசிஸ் எனப்படும் காளாஞ்சகப்படை(Psoriasis)

சித்த மருத்துவர் ஜெரோம் சேவியர் B.S.M.S, M.D

Feb 13, 2016

Dr.Jeromeதோல் நோய்களில் ஒன்றான சொரியாசிஸ் (Psoriasis) எனப்படும் காளாஞ்சகப்படை நோய் வெண்பருச்செதில் மற்றும் செதில் உதிர் நோய் எனவும் அழைக்கப்படுகிறது.

வெள்ளைக்காரர்களிடம் 2% காணப்படும். இந்நோய் ஆப்பிரிக்கர்களிடமும், ஆசியர்களிடமும் அதைவிடக் குறைவாகவே காணப்படுகிறது.

நோயின் தன்மை:

Psoriasis6தோலில் வெள்ளை நிறத்தில் பளபளப்பான செதில்கள் போன்று உருவாகும் படைகள் தோன்றும்.

இந்தப் படைகளின் உருவமும், அளவும், வடிவமும் ஆளுக்காள் வேறுபடும். இது உடலில் எந்த இடத்திலும் தோன்றலாம். பெரும்பாலும் தலை மற்றும் உடலில் தோன்றும், சிலருக்கு நகங்களை பாதித்து நகத்தில் பள்ளங்களும், குத்தியது போன்ற குழிகளும் தோன்றும்.

சிலருக்கு இந்நோய், மூட்டுகளையும் பாதித்து மூட்டுவலியை உண்டாக்கும் (Psorisatic Arthritis).

இந்நோய் ஏன் ஏற்படுகிறது?

பல்வேறு காரணிகளால் இந்நோய் ஏற்படுகிறது. பெரும்பாலும் பரம்பரை காரணி உள்ளது. தாய் அல்லது தந்தையில் ஒருவருக்கு இந்நோய் இருந்தால் அவர்களின் வாரிசுக்கு இந்நோய் வருவதற்கு 25% வாய்ப்புள்ளது. இருவருக்கும் இந்நோய் இருந்தால் வாரிசுக்கு 50% வாய்ப்புள்ளது.

Psoriasis5தோலில் பல அடுக்குகள் உள்ளன. கீழே உள்ள அடுக்கில் உள்ள செல்கள் (Keratinocyte) முதிர்ந்து, அடுத்த அடுக்காக மாறும். இவ்வாறு இறுதியில் மேலே உள்ள அடுக்கில் உள்ள செல்கள் துகள்காக உதிர்ந்து விடும். இந்த நிகழ்வுகள் இயற்கையாக தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும்.

இந்த மொத்த நிகழ்வும் ஒருமுறை நடைபெறுவதற்கு 28 நாட்கள் ஆகும். அதாவது கீழ் அடுக்கில் உள்ள செல்கள் முதிர்ந்து கடைசி அடுக்கிற்குச் சென்று உதிர்வதற்கு 28 நாட்கள் ஆகும். ஆனால் சொரியாசிஸ் நோயில் இவை 5 நாட்களில் நடந்து விடுகிறது. எனவே முறையாக முதிர்ச்சி அடையாமல் தோல் செல்கள் உதிர ஆரம்பிக்கின்றன. இவர்களுக்கு நகங்களும் இதேபோல முதிர்ச்சி அடையாமல், வேகமாக வளர்வதால் நகங்களும் குழிகள் விழுந்து காணப்படும்.

சோரியாசிஸை அதிகப்படுத்தும் காரணிகள்:

  • காயங்கள்
  • சில தொற்றுக் கிருமிகள்
  • சிலருக்கு வெயில்
  • சில மருந்துகள்
  • மன அழுத்தம்

எந்த வயதினருக்கு இந்நோய் ஏற்படுகிறது:

  • எல்லா வயதினருக்கும் வரலாம். ஆனால் பொதுவாக 5 வயதுக்குள் உள்ள சிறுவர்களுக்கு வருவதில்லை.
  • பொதுவாக பதின்வயது மற்றும் வாலிப வயதில் ஆரம்பிக்கும்.
  • அதற்கடுத்து 50 மற்றும் 60களில் ஆரம்பிக்கலாம்.
  • எவ்வளவு குறைந்த வயதில் ஆரம்பிக்கிறதோ, அவ்வளவு நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

மருத்துவம்:

சித்த மருத்துவத்தில் சிறப்பாக குணப்படுத்தக்கூடிய நோய்களில் இந்த நோயும் ஒன்று. பொதுவாகவே தோல் நோய்களுக்கு சித்த மருத்துவமே சிறந்தது என்பதை ஏற்கனவே கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறேன்.

மனதை சாந்தப்படுத்தக்கூடியதும், தோல் செயல்பாட்டை சரிசெய்யக்கூடியதுமான உள் மருந்துகளுடன், புற மருந்துகளும் தொடர்ந்து முறையாக எடுப்பதன் மூலம் இந்நோயை முற்றிலும் சரி செய்யலாம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

  • அசைவம்
  • கம்பு
  • தினை
  • வரகு
  • சாமை
  • கிழங்கு வகைகள்
  • கொய்யா
  • முட்டை
  • மீன்கள்
  • கருவாடு
  • கத்தரிக்காய்
  • மாங்காய்

மேலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருள் நோயினை அதிகரிக்கலாம். அதை அறிந்து தவிர்ப்பது நல்லது.

மருத்துவ ஆலோசனைக்கு:

Dr.Jerome -FI

Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D

சித்தமருத்துவ மையம்,

டாக்டர்ஸ் பிளாசா,

சரவணா ஸ்டோர் எதிரில்,

வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,

வேளச்சேரி, சென்னை.

அலைபேசி எண்: 9444317293

இணையதள முகவரி:www.doctorjerome.com

மின்னஞ்சல் முகவரி :drjeromexavier@gmail.com

முகநூல் முகவரி: https://www.facebook.com/jerome.xavier.5209?fref=ts


சித்த மருத்துவர் ஜெரோம் சேவியர் B.S.M.S, M.D

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சொரியாசிஸ் எனப்படும் காளாஞ்சகப்படை(Psoriasis)”

அதிகம் படித்தது