மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

டெர்விஷ் ஆட்டம் (கவிதை)

குமரகுரு அன்பு

Jan 1, 2022

 siragu dervish aattam1

சூஃபியின் நறுமணம் நாசியெல்லாம் நுழைந்து மனதில் முகிழ்ந்தொரு இறகைப்போல்

இங்குமங்கும் திரிவதாக ஒரு ஆட்டத்தைத்துவங்கி

மெல்லிய சூரியஒளியின் விரல்களைப் பிடித்தெழும்பி வரும் நிலவின்பால் வெளிச்சமும்

கலந்த நதிப்பரப்பின் நிறத்தின்மீது மோதும் காற்றின் அலையென ததும்பும் கண்களால்

நீண்டநெடுந்தூர பயணத்தின் களைப்பில் நிழலாடி யமர்ந்திருக்கும் பெருமரத்தின் இலைகள்

எம்மீது காற்றைத் தெளிப்பதைப்போல் விரல்களால் வருடியபடி

குற்றம் புரிந்தவனின் கால்கள் மண்ணுக்கு பாரமின்றி மெல்ல நகர்வதைப்போல் நகர்ந்து

கொண்டிருக்கும் குதிகாலுக்கு ஈடு கொடுக்கும் கட்டைவிரலில் நின்று ஊன்றியாடுகிறான்…

இந்த இருளுக்குள் ஒரு பெரிய உலகம் மறைக்கப்பட்டு அவன்மட்டுமேத் தெரிவதைப் போன்ற

மாயையை உருவாக்கி, அதையொரு போத்தலில் நிரப்பி குலுக்கி அருந்த கொடுத்து

எனக்குள் சென்று நிரப்பி தளும்ப செய்து மயக்கி போதையாக்கி கொண்டிருக்கிறான்

அக்கலைஞன்!!

அவனுக்குஇந்தநேரம்

இந்நொடி

இத்தருணம்

இந்தநான்தான்

நான்அளிக்கக்கூடியமீப்பெரிய

பரிசு!!


குமரகுரு அன்பு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “டெர்விஷ் ஆட்டம் (கவிதை)”

அதிகம் படித்தது